சென்னை: சூப்பர் ஸ்டாரின் செல்வாக்கால், மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ், ஐ.நா.வின் பெண்கள் நல நல்லெண்ணை தூதரானது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் கணவருடன் விவாகரத்து பெற்று வீட்டில் வெட்டியாக இருந்த செளந்தர்யாவுக்கு பிரதமர் மோடிக்கு மின்னஞ்சல் அனுப்பி விலங்குகள் நல அமைப்பின் நல்லெண்ண தூதர் பதவியை வாங்கிக் கொடுத்துள்ளார்.

இதனை அறிந்த உடனே நாம் டம்ளர் கட்சித் தலைவர் சீமான், ஜல்லிக்கட்டுக்கு எதிராக கன்னடர் ரஜினியின் மகள் செளந்தர்யா புறப்பட்டுள்ளார், எனவே அவரது உருவ பொம்மையை எரிக்கவும், கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும், தனது தம்பிகளுக்கு அன்புக்கட்டளையிட்டார். டீ குடிக்க சொன்னாலே, தீக்குளிக்கும் கூட்டம் தம்பியர் செளந்தர்யாவின் உருவ பொம்மையை கொளுத்தினர், புகைப்படத்தை செருப்பாலும், துடைப்பத்தாலும் அடித்து தங்களது தீரா பழியை ஆற்றினர்.

சௌந்தர்யா ரஜினிக்கு எதிரான போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில், விலங்குகள் பாதுகாப்பு அமைப்பில் தனது பதவி குறித்து விளக்கம் ஒன்றை நமது கப்ஸா நிருபருக்கு, அதில் கூறி இருப்பதாவது: எனது பணி ஜல்லிக்கட்டுக்கு எதிரானது இல்லை. படங்களில் உண்மையான விலங்குகள் பயன்படுத்தப் படுகிறதா இல்லை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்தப் படுகிறதா என ஆராயும் பணி மட்டும் தான். மேலும், நிஜ ஜல்லிக்கட்டில், மாடுகளும், கஷ்டப்படுகிறது அதை பிடிக்கப் போகும் மனிதர்களும், குடல் சரிந்து வீர மரணம் அடைகின்றனர்.jallikkattu

அதனால் தமிழகத்தில் பெரும் தலைவலியாக உள்ள ஜல்லிக்கட்டை மோஷன் கேப்சர் டெக்னாலஜியில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலமாவே நடத்தவும் அதை பிரதமர் மோடி செய்வதுபோல் ‘மன் கி பாத்’ போல ‘மாடுகள் கி பாத்’ என நம் விவசாயிகளையும், மக்களையும் குஷிப்படுத்த சீரணி அரங்கம், தீவுத்திடல் போன்ற இடங்களில் பிரம்மாண்டமான திரைகளில் 3டி அனிமேசன் தொழிநுட்பம் மூலம் ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்படும். ஜல்லிக்கட்டு நடந்த மாதிரியும் இருக்கும், நம்ம நாட்டு மாடு அழிந்து அன்னிய பால் பொருட்கள் விற்பனை ஆன மாதிரியும் இருக்கும். இதன்மூலம் ஒரு முறை தயாரித்த வீடியோவை தேயத் தேய பல ஆண்டுகளுக்கு ஓட்டலாம் ஆனால் செலவுக் கணக்கை மட்டும் வருடாவருடம் புதிதக எழுதிக்கொள்ளலாம். மேலும் “ஜல்லிக்கட்டு” என்ற பெயரில் ஒரு ஆப்பை எனது நண்பர்களிடம் சொல்லி தயாரித்துள்ளேன். இது ஒரு மொபைல் கேம் ஆப், இதை அடுத்து வெளிவரும் கபாலி-2 பட டிக்கெட் வாங்குபர்களுக்கு இலவசமாக தரலாம் என்றும் திட்டமிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

There are no comments yet