சென்னை: நான் உண்ணாவிரதம் இருந்திருந்தால் காவேரி ஒரே நாளில் வந்திருக்கும் என்று தி.மு.க. தலைவர் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: காவேரி விவகாரத்தில் அதிமுக அரசு மிகவும் தாமதமாக செயல்படுகிறது. நான் ஆட்சியில் இருந்திருந்தால் உண்ணாவிரதம் இருந்து காவேரியை ஒரே நாளில் கொண்டு வந்திருப்பேன். சென்ற முறை இலங்கை தமிழர்களுக்காக நான் உண்ணாவிரதம் இருந்ததை பார்த்து பயந்து, அன்றைய இலங்கை அதிபர் ராஜபக்ஷே ஒரே மணி நேரத்தில் போரை நிறுத்தவில்லையா. அந்த ஒரு உண்ணாவிரதத்தின் மூலம் இலங்கை தமிழரை காப்பாற்றிய எனக்கு அமெரிக்காவின் ‘உடான்ஸ் யூனிவர்சிட்டி’ எனக்கு தமிழின காவலன் என பட்டம் கொடுத்ததையும் உலகமே அறியும்.karunanidh

ஆனால் தமிழ்நாட்டிலும் ஒரு அரசு இருக்கிறதே, அவர்கள் இதைப் பற்றியெல்லாம் ஏதாவது நடவடிக்கை எடுக்கிறார்களா என்று கேட்டிருந்தேன். அதற்கும் எந்தப் பதிலும் இல்லை; காவிரி பிரச்சினையிலே தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்பதற்கும் எந்தப் பதிலும் இல்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாததாலேயே ஜெயலலிதா கைதேர்ந்த அரசியல்வாதி என்று சொல்லும் அளவுக்கு ஒரு நாளேடு போயிருக்கிறதென்றால், தமிழக நிலைமை எவ்வளவு வெட்கக் கேடானது என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனது திரைப்பட அனுபவத்தில் எத்தனையோ காவேரிகளையும், கோதாவரிகளையும் பார்த்தவன் நான், எனக்கு இதெல்லாம் ஒரு பிரச்னையே அல்ல. எனவே ஜெயலலிதா என்னை போல் தனது முழு பலத்தை பயன்படுத்தி காவேரி பிரச்னையை தீர்க்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

There are no comments yet