சென்னை: சென்னை, போயஸ் கார்டன் வீட்டில் இருந்த ஜெயலலிதாவுக்கு, நேற்று முன்தினம் இரவு, 10:15 மணிக்கு, திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.உடனடியாக, அப்பல்லோ மருத்துவர் கள், போயஸ் கார்டன் சென்றனர்; முதல்வரின் உடல்நிலையை பரிசோதித்தனர். பின், சிகிச்சைக்காக, மருத்துவமனையில் அவரை சேர்த்தனர்.

நேற்று முன்தினம் இரவு, 10:40 மணி முதல், நேற்று அதிகாலை, 1:45 மணி வரை, தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனை சார்பில், அதிகாலை, 1:00 மணிக்கு, மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக, முதல்வர் பாதிக்கப் பட்டார்; தற்போது, நலமாக உள்ளார். எனினும், தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்’ என, குறிப்பிடப்பட்டிருந்தது.jaya-hosp-statement

மருத்துவர்களின் இந்த செய்தியை கேட்ட அதிமுக தொண்டர்கள், சென்னை கண்ணம்மா பேட்டையில் மேற்கு மாவட்ட செயலாளர் பன்னாடை பாண்டியன் தலைமையில், முதல்வர் ஜெயலலிதாவின் காய்ச்சல் குணமடைவதற்காக கணக்கிடலங்கா ஆனாசின் மாத்திரைகளையும், குரோசின் மாத்திரைகளையும் சாப்பிட்டதாக கழக அமைப்பு செயலாளர் மேசை தட்டி மேகநாதன் தெரிவித்தார். இந்நிலையில் அளவுக்கதிகமாக ஆனாசின், குரோசின் மாத்திரைகளை சாப்பிட்டதால் அனைவரும் மயக்கமடைந்து ராயப்பேட்டையில் உள்ள மருத்துவர்களே இல்லாத அரசு மருத்துவமனையில் மார்ச்சுவரி வார்டில் சிகிச்சை பெற்று வருவதாக நம்பத்தகாத அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

There are no comments yet