கிருஷ்ணகிரி: நடிகர் ரஜினிகாந்த் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழர் என்று அறிவிக்க வேண்டி தமிழக காங்கிரஸ் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கூறப்படுவதாவது: ரஜினிகாந்த் பூர்விகம் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனப்பள்ளியை அடுத்துள்ள நாச்சிகுப்பம் ஆகும். ரஜினிகாந்த் தந்தை ரானேஜிராவ் மற்றும் அவரது தாயார் ராம்பாய் நாச்சிகுப்பம் வருவாய் கிராமத்தில் பூர்வீகமாக வாழ்ந்து வந்துள்ளனர். பிழைப்பு தேடி பெங்களூரு சென்ற ரஜினிகாந்த்தின் பெற்றோர்கள் தந்தை ரானேஜிராவ் மற்றும் அவரது தாயார் ராம்பாய் ஆகியோருக்கு நினைவகம் வைத்து நாச்சிகுப்பம் கிராமத்திற்கு பல சேவைகள் செய்து வருகின்றனர் ரஜினியின் உறவினர்கள். ரஜினிகாந்த் பெற்றோர்களின் நினைவகம் ராகவேந்திர அறக்கட்டளை மூலம் பராமாரிக்கப்பட்டு வருகிறது. அறக்கட்டளையின் தலைவராக ரஜினிகாந்த்தின் சகோதரர் சத்தயநாராயணராவ் இருந்து வருகின்றார்.

இந்தியாவில் மொழிவாரி மாகானங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பே தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனப்பள்ளி சார்பதிவாளர் எல்லைக்கு உட்பட்டு நாச்சிகுப்பம் வருவாய் கிராமத்தில் ரஜினிகாrajini-parentsந்த்தின் பெற்றோர்கள் மற்றும் முன்னோர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான ஆவணங்கள், ஆதாரங்கள் மற்றும் அசையா சொத்துக்கள் இன்றும் வேப்பனப்பள்ளியில் உள்ளது. மேலும் ஆதாரமாக சமீபத்தில் இந்திய தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் வேப்பனப்பள்ளியில் அகழ்வாராய்ச்சி செய்தபோது ரஜினியின் கொள்ளு தாத்தா குடித்த துண்டு பீடியை கண்டு பிடித்தனர். ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் ரஜினியின் கொள்ளு தாத்தா குடித்த அந்த பீடி இன்னும் அணையாமல் இருப்பதாகவும், ரஜினியின் மூதாதையர் குடித்த பீடி என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் வேண்டும் என்று அங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஒரு விஞ்ஞானி தெரிவித்தார்.

இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நமது கப்ஸா நிருபரிடம் கூறியதாவது: இந்த துண்டு பீடி ஆதாரம் ரஜினியின் பூர்விகம் தமிழ் நாடுதான் என்று உறுதிப்படுத்துகிறது. மேலும் எனது நீண்ட கால நண்பர் ரஜினி எங்கே எனது முந்தய கட்சியான ப.ஜ.க.விற்கு ஆதரவு தெரிவித்து விடுவாரோ என பயந்து கொண்டிருந்தேன், இப்போது ரஜினி தமிழர்தான் என்பதற்கு காங்கிரஸ்தான் ஆதாரங்களை தோண்டியெடுத்து உள்ளது. எனவே அவர் காங்கிரசுக்கு ஆதரவு தருவார் என நம்புகிறேன். எனவேதான் தமிழக அரசுக்கும் தமிழக முதல்வர் அவர்களுக்கும் ரஜினிகாந்த்தின் பூர்வீகம் தமிழகம் என்றும் ரஜினிகாந்த் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழர் என்றும் அரசு அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.

There are no comments yet