கோயம்புத்தூர்: கோவை மாவட்ட இந்துமுன்னணி செய்தித் தொடர்பாளர் சசிக்குமார் ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்தக் கொலையைத் தொடர்ந்து இந்து முன்னணி அமைப்பினர் கோவையில் வெறியாட்டம் போட்டனர். வன்முறையில் ஈடுபட்டு போலீஸ் ஜீப், வாகனங்களைத் தீவைத்து எரித்தும், கடைகளை அடித்து நொறுக்கியும் வன்முறையில் ஈடுபட்டதால் கோவை நேற்று ஸ்தம்பித்தது. கடைகள், வணிக நிறுவனங்கள் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டன.
இதனால் கோவை நகர் முழுவதும் நேற்று காலை முதல் 90 சதவீதத்துக்கும் அதிகமான கடைகள் மூடப்பட்டிருந்தன. சில இடங்களில் திறந்து இருந்த கடைகள், ஒரு ஏ.டி.எம். ஆகியவையும் அடித்து நொறுக்கப்பட்டன. போலீஸ் வாகனங்களும் தீவைத்து கொளுத்தப்பட்டன. பலத்த கலவரத்துக்கு இடையே சசிகுமாரின் உடல் நேற்று ஊர்வலமாக எடுத்து செல்பட்டது. ஊர்வலத்தின் போது மூண்ட கலவரத்தின் இடையே துடியலூரில் பூட்டியிருந்த ஒரு செல்போன் கடைக்குள் புகுந்த இந்து முன்னணியினர் சிலர் அங்கிருந்த செல்போன்களை திருடியுள்ளனர். ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் அவர்கள் சூறையாடினர். மேலும் அஜ்மீர் பிரியாணி கடைக்குள் நுழைந்து அண்டா நிறைய மாட்டு பிரியாணியையும் தூக்கி சென்று சாப்பிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காட்டுவாசி சுப்பிரமணியம் நமது கப்ஸா நிருபருக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது: ஸ்வாதியை கொலை செய்த ராம்குமாரை நமது போலீஸ் கரண்ட் வைத்து கடவுளிடம் அனுப்பியது. அந்த விவகாரத்தை வைத்துக் கொண்டு திருமா உள்பட பல அரசியல்வாதிகள் கொஞ்ச நாள் பிழைப்பு நடத்தலாம் என்று நினைத்திருந்த சமயத்தில் எங்களுக்கு வசதியாக சசிகுமார் பரலோகம் போனார். எனவே திட்டமிட்டு ராம்குமார் கொலையை திசை திருப்பவே கோவையில் பிரியாணியை திருடி கலவரம் செய்தோம். எங்கள் தலைவர் பிரதமர் மோடி அடிக்கடி அண்டா பாரதம், அண்டா பாரதம் என்று சொல்லி இருக்கிறார். அவரது கனவை நினைவாக்கவே அண்டாவோடு பிரியாணியை திருடினோம். எங்களது சங் பரிவார் இப்படித்தான் பலருக்கு சங்கு ஊதுவார்கள். எனவே அடுத்த சங்கு யாருக்கென்று காத்திருக்கிறோம் என்று கூறினார்.
There are no comments yet
Or use one of these social networks