சென்னை:உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட, முதல்வர் ஜெயலலிதா, சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், கடந்த, 22ம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவால் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப் பட்டது. நேற்று முன்தினம் மதியம், ‘காய்ச்சல் இல்லை; வழக்கமான உணவுகளை, ஜெயலலிதா உட்கொள் கிறார்’ என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. முதல்வர் அனுமதிக்கப்பட்டதைஅறிந்து, அ.தி.மு.க., வினர், மருத்துவமனை முன் குவிந்தபடி உள்ளனர். அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் நேற்று காலை வெளியிட்ட அறிக்கையில், ‘முதல்வர் ஜெயலலிதா, தொடர் கண்காணிப்பில் உள்ளார்; அவர் வழக்கமான உணவுகளை உட்கொண்டார் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. முதல்வர் சிகிச்சை முடிந்து எப்போது வீடு திரும்புவார் என, அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும், மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கவில்லை.self immolation

இந்நிலையில் அஷ்டமி, நவமி, வந்த காரணத்தால் தெய்வ நம்பிக்கை உடையவர்கள் அந்த நாட்களில் வீடு திரும்ப மாட்டார்கள் என்பதால் இருக்க கூடும். இன்று நவமி தினம் முடிந்த பின்னர் அம்மா அவர்கள் வீடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கலாம் என்று போயஸ் கார்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து நமது கப்ஸா நிருபரிடம் கருத்து தெரிவித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, முதல் அமைச்சர் ஜெயலலிதா மீது கொள்கை அளவில் நான் வேறுபட்டாலும், அவர்கள் விரைவில் உடல் நலம் பெற்று, பணியினைத் தொடர வேண்டுமென்று வாழ்த்துகிறேன். அவருக்கு அஷ்டமி ஆனால் நமக்கு நிரந்தர கஷ்டமி சொந்த வீட்டுக்கு திரும்ப யாரும் நாள் நட்சத்திரம் பார்க்கவேமாட்டார்கள். ஒரு வேளை தனக்கு எனக்கு வந்த காய்ச்சலை கண்டித்து தொண்டர்கள் தீக்குளித்தால் தான் டிஸ்சார்ஜ் ஆவேன் என அப்பல்லோவில் ஜெயா அடம் பிடிக்கிறார் என்று நினைக்கிறேன். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்து அலுவல்களை கவனிக்கிறார் என்று கூறுகிறார்கள். எனக்கு சந்தோசம் தான். நான் கட்டிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக்கினார், தற்போது மருத்துவமனை செயலகமாகிறது , எதை விதைத்தோமோ அதைத்தானே அறுவடை செய்யமுடியும் என்று கூறி உடன் பிறப்புகளுக்கு அடுத்த கடிதத்தை எழுத பிஸியானார்.

There are no comments yet