ராமேஸ்வரம் / சென்னை: : ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் நடிகர் ரஜினி குடும்பத்தினர் சார்பில் 1,008 கலச பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. காசி விசுவநாதர் சன்னதி முன்பு 1,008 கலசத்தில் புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இந்த பூஜையில் நடிகர் ரஜினியின் சகோதரர் சத்யநாராயணா பங்கேற்றார். பின்னர், திருக்கோயில் குருக்கள் சிவமணி தலைமையில், பூஜையில் வைக்கப்பட்ட புனித நீரால் ராமநாதசுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும், யாகங்களும் நடைபெற்றன.

பின்னர் நமது கப்ஸா நிருபரிடம் சத்யநாராயணா கூறியதாவது: சூப்பர் ஸ்டார் ரஜினி உத்திரவுப்படி தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெறவு இறைவனிடம் வேண்டியுள்ளேன். தமிழக, கர்நாடக மக்கள் ஒற்றுமையாகவும், சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும் அப்போதுதான் எங்களுக்கு பிழைப்பு நடக்கும். , நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார்எ, ஆனால் வரமாட்டார். அதில் எனக்கும், எங்கள் குடும்பத்தினருக்கும் விருப்பம் இல்லை. மக்கள் விரும்பும் கதைகளைத் தேர்வு செய்து அவர் நடித்து வருகிறார். அடுத்த படத்தில் ஒரு வயதான கிழவியிடமிருந்து அதி திமிரான முக்கிய கட்சியை (அ.தி.மு.க) வை கைப்பற்றி ஆச்சியை கை பிடித்து கல்யாணம் செய்கிறார். பிறகு அரசியலில் குதித்து வர இருக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வார்டு கவுன்சிலர் ஆகிறார். இதுதான் கதை. இதை எந்திரன் இரண்டாம் பாகமாக எடுத்து நடிப்பதற்காக ரஜினி தயாராகி வருகிறார் என அவர் தெரிவித்தார்

There are no comments yet