வாஷிங்டன்: இசை நிகழ்ச்சிக்காக அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதிக்குச் சென்றிருந்த இளையராஜாவிடம், ஹிந்திப் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகர்கள் ஃபாவத் கான், மஹிரா கான் ஆகியோர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறாவிட்டால், மகாராஷ்டிர நவநிர்மாண் சேனையே அவர்களே வெளியேற்றும் என்று மிரட்டல் விடப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்விகள் கேட்டார்கள். அதற்குப் பதிலளித்த ராஜா, இசைக்கு எல்லைகள் கிடையாது; அதற்கு நாடுகள் தெரியாது என்றார். அப்போது ரஹ்மான் கேள்வியை தப்பித்தவறி ஒரு நிருபர் கேட்டுபிட்டார். நெருப்பைக் கக்கியது போல் பதிலளித்த இளையராஜா, “ரஹ்மான் பற்றி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? நீங்கள் அவரை மதிக்கிறீர்கள். உங்களுக்கு அவரைப் பற்றித் தெரியும். ஆனால் நானும் அதேபோல எண்ணவேண்டும் என எதிர்பார்க்காதீர்கள்” என்றார்.

பிறகு ரஹ்மான் பெயரை உச்சரித்து விட்டோமே என்று அவசரமாக வாயை பினாயிலில் கழுவ ரெஸ்ட் ரூமுக்கு விரைந்த இளையராஜா சாரை அங்கு முன்பே பதுங்கி இருந்த நமது கப்ஸா நிருபர் போட்ட கிடுக்கிப் பிடியில் இருந்து தப்ப முடியாமல் தனது ஆதங்கக்கத்தை கொட்டித் தீர்த்தார். முதலில் லண்டன் பொண்ணூ சுஜயா சந்திரனை மணந்து என் மகன் யுவன் ஷங்கர் சந்தோசமாக இருந்தான். பிறகு “சின்ன வயசிலேயே பிரபலமாகி விட்டேன், என்னை மற்றவர் பெரிய ஆளாக மதிக்கணும்பா இன்னோரு கல்யாணம் பண்ணிக்கிறேன் என்றான்.” சரி வயலின் மாதிரி ஒரு பொண்ணு பத்தாது, தபேலா மாதிரி தட்டி ரசிக்க இரண்டு கேட்கிறான் என்று நானும் தொலையுது கருமம் என்று ஒத்துக் கொண்டேன். ஷில்பா என்ற பெண்ணை காதலித்து ஆந்திராவில் திருமணம் செய்தான். கொஞ்ச நாளிலேயே ஷில்பாவுக்கு கில்பா கொடுத்துட்டு தந்தி அறுந்த வீணையாக வீணாய் போய் இருந்தான்.

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி யாரோ ஒரு ஜோசியன் வந்து, முதலில் இந்துவாக இருந்த உன் அப்பா பிரபலமானார், பிறகு முஸ்லிமான ரஹ்yuvanshankarமான் ஆஸ்கார் அள்ளினார், பின்னர் கிறித்துவராக இருந்த ஹாரிஸ் ஜெயராஜ் முன்னுக்கு வந்தார். இதில் மிக உயரத்தை தொட்ட ரஹ்மான் போல ஆகணும்னா நீ முஸ்லிமா மாறணும் என்று ஒரு தப்பான ‘டியூனை’ போட்டுவிட்டான். யுவன் சங்கர் என்ற என் மெல்லிசை, அப்துல் காலிக் என்று ஹெவி மெட்டல் மியூசிக்காக மாறி மூன்றாவது திருமணமும் செய்து சோசியல் மீடியாவில் ஒப்பாரி சாங்காக ஒலித்தான். Boy ஆக  இருந்த என் பையன் பாய் ஆக மாறியதற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் தவறான முன்னுதாரணம் தான் காரணம். சமீபத்தில் கூட கிறிஸ்தவரான சமந்தா, நாக சைதன்யாவை கல்யாணம் பண்ண இந்து மதத்துக்கு மாறியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த மாதிரி காதலியை இந்து மதத்திற்கு மாற்ற யுவனுக்கு தெரியவில்லை, எனக்கும் இப்படி வந்து ஒரு பிள்ளை பிறந்துள்ளானே..என்று மீண்டும் பினாயிலை ஒரு மூடி வாயில் ஊற்றி, காறி துப்ப முயல, மங்களம் பாடிவிட்டு விருட்டென இடத்தைக் காலி செய்தார் நமது கப்ஸா நிருபர்.

There are no comments yet