சென்னை: சமீபத்தில் பச்சையப்பன் கல்லூரிக்குள் மாணவர்கள் கொண்டுவந்த கைப்பையில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை கல்லூரிக்கு கொண்டு வந்திருந்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், அந்த மாணவர்களை காவல் துறையினர் கைது செய்து, இது சட்டசபையல்ல ஆயுதங்களுடன் செல்வதற்கு, என்று அறிவுரை கூறினார்.
இதையறிந்த நமது கப்ஸா நிருபர் பாதுகாப்புக்காக கவச உடையுடன் தனது பழைய ஓட்டை சைக்கிளில் பச்சையப்பன் கல்லூரிக்கு விரைந்த போது, காவல் துறையிடம் ஒன் பாத்ரூம் போவதாக சொல்லிவிட்டு ஓரமாக வந்து ஐந்து மாணவர்களும் அளித்த கூட்டான பேட்டி: நாங்க இந்த காலஜில் தான் படிப்பதாக எங்கள் பெற்றோர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் நாங்கள் இங்கு படிக்க வரவில்லை பிடிக்க வருகிறோம். அதாவது சிகரெட் பிடிக்கிறோம், பிகர்களை துரத்தி பிடிக்கிறோம். எங்கள் ஐந்து பேருக்கும் (முன்னாள்) காதலிகள் இருக்கிறார்கள் அனைவரையும் நாங்கள் மட்டும்தான் ஒன் சைடாக காதலித்தோம். பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான எங்களுக்கே பச்சை சிக்னல் கொடுக்காத காதலிகள் இருந்தென்ன இல்லாவிட்டால் என்ன? நம்ம தமிழ் நாட்டில் தான் ஒருதலை காதல் கொலைகள் என்பது பொட்டிகடையில் மூக்குபொடி வாங்குவது மாதிரி சர்வ சாதாரணமாகி விட்டதே.
எனவே இளையதளபதி வழியை பின் பற்றி, “திருப்பாச்சி” அருவா, கபடா “கத்தி”, துருப்பிடித்த “துப்பாக்கி”போன்றவற்றை எடுத்துக் கொண்டு காலேஜில் மடியாத பிகர்களை பொட்டலம் கட்ட வந்தோம். நுங்கம்பாக்கத்தில் கூட ஸ்வாதியை யாரோ வெட்டி கொன்னான், நம்ம திறமையான காவல்துறை ராம்குமாரை குற்றவாளியாக்கி, நிஜ குற்றவாளியை பற்றி கவலைப்படாம, அரசு மின்சாரம் திருட வைத்து தற்கொலை செய்ய வச்சுட்டாங்க. இல்லாட்டி நம்ம நீதிபதிங்க கொலை குற்றவாளிக்கு தையல் மிஷினும், “பாக்கெட் மணி” பத்தயிரம் பணமும் கொடுத்து கவுரவம் செஞ்சிருப்பாங்க. அதை பார்த்துத்தான் எங்களுக்கு தெகிரியம் வந்தது. எங்களது அடுத்த திட்டம் எதாவது கூலிப்படையுடன் சேர்ந்து, பின்னாடி எம்.எல்.ஏ., எம்.பி. ஆவதுதான் என்று மகிழ்ச்சியுடன் பேட்டி அளித்தனர்.
There are no comments yet
Or use one of these social networks