சென்னை: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், நவம்பரில் நடக்கவுள்ள, ‘சார்க்’ மாநாட்டை புறக்கணிக்க, இந்தியா முடிவு செய்துள்ளதாகவும், அந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார் என்றும், மத்திய வெளியுறவுத் துறை சார்பில் நேற்று அறிவிக்கப்பட்டது. இது குறித்து தமிழக குடிமகன்கள் மிகுந்த கவலையில் இருப்பதற்காகவும், டாஸ்மாக் வளர்ச்சிக்கும், விற்பனைக்கும் பிரதமர் மோடியின் இந்த முடிவு பயங்கர பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அப்பல்லோ மருத்துவமனை வாசலில் கடந்த ஒருவாரமாக அம்மாவை பார்க்க முடியாமல் ஒற்றை காலில் நின்று கொண்டிருந்த ஓ.பி.எஸ் நமது நமது கப்ஸா நிருபருக்கு அளித்த பேட்டி:

நிருபர்: வணக்கம், அண்ணே… ரெம்ப டயர்டா இருக்கீங்க போல…

ஓ.பி.எஸ்: என்னப்பா செய்றது, அம்மாவுக்கு காய்ச்சல் வந்தாலும் வந்ததது, எங்களுக்கு குளிர் விட்டுப் போச்சு..

நிருபர்: என்ன சொல்றீங்க…ops-sad

ஓ.பி.எஸ்: ம்ம்ம், ஒண்ணுக்குமில்ல, நாங்கள் அம்மாவுக்காக சோறு தண்ணி இல்லாம அப்பல்லோ வாசலில் தவமிருக்கோம். ஒரு வாரமா சாப்பிடலையா அதான் சோர்வு…

நிருபர்: காவிரியில் இப்ப தண்ணி விடலயே, என்ன செய்ய போறீங்க…

ஓ.பி.எஸ்: நான் எந்த காலத்துல என்ன செஞ்சிருக்கேன், அம்மாதான் அப்பப்ப லெட்டர் எழுதுவாங்க..இதுக்கும் ஒண்ணு எழுதுவாங்க, கவலை படவேண்டாம்

நிருபர்: என்னண்ணே ரெம்ப விரக்தியா பேசுறீங்க…

ஓ.பி.எஸ்: பின்ன என்னப்பா, இந்த தீர்ப்பு வரும்னு இருந்தேன்…

நிருபர்: எந்த தீர்ப்புண்ணே…காவிரி விவகாரமா

ஓ.பி.எஸ்: அட இல்லப்பா சொத்துக் குவிப்பு தீர்ப்பு, அது வந்துச்சுண்னா, முன்ன மாதிரி கொஞ்ச நாள் சி.எம் ஆகலாம், அது வேற இழுத்துக்கிட்டே போகுது

நிருபர்: ஓஹோ

ஓ.பி.எஸ்: அம்மா கொஞ்ச நாள் ஆஸ்பத்திரில இருப்பாங்க, அட் லீஸ்ட் அப்பவாச்சும் சி.எம் ஆகலாம்னு பாத்தா, இந்த அப்பல்லோகாரங்க அப்ப டிஸ்சார்ஜ், இப்ப டிஸ்சாரஜ்ன்னு ஜோசியம் சொல்ராங்க, இனிமே எனக்கு சான்ஸ் இல்லன்னு நினைக்கிறேன்.

நிருபர்: சரி விடுங்கண்ணே, அதது நடக்கிறப்போ நடக்கும், பிரதமர் மோடி சார்க்’ மாநாட்டை புறக்கணிக்க போறதா சொல்றாரே

ஓ.பி.எஸ்: அப்படியா, எனக்குத் தெரியாதே. சரக்கு மாநாட்டை புறக்கணிப்பது நமது குடிமகன்களுக்கு நல்லது இல்லை. கண்டிப்பாக இது டாஸ்மாக்குக்கு பின்னாடைவை ஏற்படுத்தும். அம்மா வெளியில் வந்தவுடன், அதாவது அப்பல்லோவில் இருந்து வீட்டுக்கு வந்தவுடன் அவரிடம் சொல்லி இதற்கும் ஒரு கடிதம் எழுத சொல்லுகிறேன்.

நிருபர்: அண்ணே அது சரக்கு இல்லைண்ணே

ஓ.பி.எஸ்: சரி சரி நீ போப்பா…அங்க சின்னம்மாவுக்கு தெரிஞ்சவுங்க யாரோ வர்ற மாதிரி இருக்கு, நான் இப்டிக்கா பசியில் மயக்கம் போட்டுக்கிறேன்

நிருபர் இடத்தை காலி செய்கிறார்.

There are no comments yet