சென்னை:நடிகை வரலெட்சுமி நேற்று வெளியிட்ட ஒரு டுவிட்டர் ட்வீட்டைத் தொடர்ந்து அவருக்கும் நடிகர் விஷாலுக்கும் இடையேயான காதல் முறிந்துவிட்டதாக கோலிவுட்டில் கிசு கிசு பரவியது. இதனை வரலெட்சுமி மறுத்துள்ளார். முன்பு விஷால் அளித்திருந்த ஒரு பேட்டியில், “லெட்சுமிகரமான பெண்ணுடன் என் திருமணம் நடைபெறும். நடிகர் சங்க கல்யாண மண்டபத்தின் பணிகள் முடிவடைந்தவுடன், அதில் திருமணம் செய்துகொள்வேன்” என்று கூறியிருந்தார். இது இவர்களின் காதல் பற்றிய செய்திகளை உறுதிப்படுத்தும் விதமாக இருந்தது. இந்நிலையில் வரலெட்சுமி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “சேர்ந்து இருப்பவர்கள் பிரியும் முறை இதை விட மோசமாக இருக்க முடியாது. ஒரு நபர் தனது 7 ஆண்டுகால உறவை தன் மேலாளர் மூலமாக முறித்துக்கொண்டார். உண்மையான காதல் எங்கே?” என்று குறிப்பிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து விஷாலுடனான அவரது காதல் முடிவுக்கு வந்துவிட்டதாக தகவல் பரவி வருகிறது.
ட்விட்டர் பதிவு குறித்து வரலெட்சுமியிடம் கேட்டபோது நமது கப்ஸா நிருபரிடம் அளித்த பேட்டி: நடிகர் சங்க கல்யாண மண்டபத்தின் பணிகள் முடிவடைந்தவுடன், அதில் திருமணம் செய்துகொள்வோம் என்று விஷால் சொன்னார். ஆனால் சமீபத்தில் நடிகர் சங்கத்தில் 3 கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கி சினாபின்னமானார். கல்யாண மண்டபம் கட்டும் ஐடியா இல்லை என்றாலும் ஒரு 300 கோடியாவது அடித்திருந்தால் சந்தோஷப் பட்டிருப்பேன். நடிக்கும் திறமை போதவில்லை பணம் அடிக்கும் திறமையும் போதவில்லை. அவருடன் டேட்டிங் செய்ததில் பேச்சுத்திறமையும் போதவில்லை என தெரிகிறது. விலங்குகள் நல அமைப்பு சார்பில் நடந்த விழாவில் பங்கேற்ற விஷால், ஜல்லிக்கட்டு தடைக்கு வரவேற்பு அளித்ததாக கூறப்பட்டது. பொது அறிவும் போதவில்லை. பசுவதையை தடுக்கவே ஜல்லிக்கட்டு வேண்டாம் என்று சொன்னேன் என பிதற்றினார்.
நான் என்ன பேக்ரவுண்டில் இருந்து வந்திருக்கிறேன் என மக்களுக்கு தெரியும்.. ‘நாட்டமை’ என்று அழைக்கப்படும் என் அப்பா சரத்குமார் அவர்கள் அந்த படத்தில் “பசு”பதி வேடத்தில் வந்து பின்னங்கால்கள் கட்டப்பட்ட காளையை அடக்கி காட்டுவார். தீர்ப்பு சொல்லும்போது ஸ்டைலாக சொம்பில் எச்சில் துப்பிக் காட்டுவார்.. அப்படி ஒரு பாரம்பரியமிக்க சல்லிக்காசு பெறாத ஜல்லிக்கட்டு பேமிலியில் இருந்து வந்து தொடைகளை காட்டி கரகட்டக்காரியாக ‘தாரை தப்பட்டை’ படம் மூலம் கலைத் தொழில் செய்த என்னை திருமணம் செய்ய வேண்டும் என்றால், நட்சத்திர கிரிக்கெட் நடந்த மைதானத்தில் பொதுமக்கள் முன்னிலையில் ஜல்லிக்கட்டுக் காளையை அடக்கினால் தான் ஒத்துக் கொள்வேன் என்று கடைசியாக அவருடைய பர்த்டே பார்ட்டியில் சொன்னேன். எனவே நான் அதற்காக .காத்துக்கொண்டிருக்கிறேன் என்று தொடையை தட்டி காட்டி பேட்டியை முடித்தார்.
There are no comments yet
Or use one of these social networks