சென்னை : ஜெயலலிதா சிகிச்சை பெறும் படத்தை வெளியிட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கருணாநிதி, “முதல்வரின் உடல் நலம் குறித்து வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டாமா?” என கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த 22ஆம் தேதி முதல், ஒரு வார காலத்திற்கும் மேலாக – சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாடு ஆகியவற்றுக்குச் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வருவதாகவும், ஆனாலும் இன்னும் சில நாட்கள் மருத்துவ மனையிலே இருக்க வேண்டுமென்று அப்பல்லோ மருத்துவமனை தெரிவிப்பதாகவும் செய்திகள் வருகின்றன. சில தொண்டர்கள் மண் சோறு சாப்பிட்ட படமும், ஜெயலலிதா படத்திற்கு ஒரு பெண்மணி லட்டு ஊட்டுவது போலவும் படங்கள் வெளியாகி வாட்சப்பிலும், ஃபேஸ்புக்கிலும் வைரல் ஆயின. பின்னர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய திமுக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இன்று அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் தேங்காய் உடைத்தும் நேர்த்திக் கடன் செலுத்தியும் அம்மா குணமடைய எலிப்படைத் தலைவர் கருணாஸ் உட்பட தொண்டர்கள் வழிபாடு நடத்தினர்.

அப்போது கேமரா இல்லாமல் வெறும் கையை பிசைந்தபடி நின்று கொண்டிருந்த செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் நமது கப்சா நிருபரிடம் பேட்டி அளித்தார்.

நிருபர்: ஜெயலலிதா சிகிச்சை பெறும் படத்தை வெளியிட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி சொல்லி இருக்காரே?

அலுவலர்: முன்பு அம்மா ஆட்சியில் அவரை குண்டுக்கட்டாக நள்ளிரவில் கைது செய்து டிராமா காட்டினோமே அந்த சம்பவத்தை நினைவில் வைத்துக் கொண்டு அம்மாவை மேக்கப் இல்லாமல் பார்க்கத்தான் அப்படி சொல்லி இருக்காரு..karuna-arrestநிருபர்: ஜெயா சிகிச்சை பெரும் படத்தை ஆவணப்படமாக எடுத்து வெளியிடலாம் என்று சொல்கிறார்களே?

அலுவலர்: எங்கள் ஆட்சியில் கோயம்பேடு மார்க்கெட்டுகளில் கிடந்து எடுத்த காய்கறியில் சமைத்து அம்மா உணவகம் திறந்தது, சந்து பொந்துகளில் சாலைகளை சரி செய்யாமால் சிற்றுந்து (மினிபஸ்) விட்டது, மற்றும் டாஸ்மாக் திறந்து தமிழ் நாட்டில் சாராய ஆறு ஓட விட்டது ஆகியவற்றை ஆவணப்படமாக எடுத்து ஏற்கனவே தமிழகம் முழுவதும் திரை அரங்குகளில் ஒளிபரப்பி வருகிறோம்.. தற்போது ஆவணப்படம் எடுப்பதில் சின்ன பிரச்னை, சென்ற ஆண்டு நாங்கள் செம்பரம்பாக்கம் ஏறியை திறந்து வரலாறு காணாத வெள்ளத்தை சென்னையில் ஏற்படுத்தி மக்களுக்கு இடையூறு செய்த போது, சமூக ஆர்வலர்கள் கொண்டு வந்த உணவு பொட்டாலங்களில் ‘அம்மா’ ஸ்டிக்கர் ஒட்டுவதை படம் பிடித்துக் கொண்டு இருந்தோம், அப்போது கேமரா தவறுதலாக தண்ணீரில் விழுந்து துருப்பிடித்து உபயோகிக்க இலாயக்கு இல்லாமல் போய்விட்டது.

நிருபர்: ஜெயா டிவியோட கேமரா இருக்குமே, அதில் எடுக்கலாமே..

அலுவலர்: கேட்டுப் பார்தோம்… அங்கு அம்மா துதி பாடவே நேரம் போதவில்லை, போதாக் குறைக்கு, புரட்சித்தலைவி அம்மாவின் தொலைக்காட்சியில் பெண்களை இழிவு படுத்தும் சீரியல் ஷூட்டிங் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.. ஒன்றுக்கும் உதாவாத விவாத மேடைகள் களை கட்டிக் கொண்டு இருக்கிறது, அது தடைப்பட்டு விடும் என்று கேமரா தர மறுக்கின்றனர். .

நிருபர்: தொண்டர்களுடன் ஒரு மொபைல் செல்பி எடுத்து வெளியிடலாமே?

அலுவலர்: என்ன வார்த்தை சொல்லிட்டீங்க அம்மா எப்போதும் ‘செல்வி’ தான் அவர் ஒருபோதும் ‘செல்பி’ அம்மா ஆக மாட்டார் தன்னலமில்லமல் கொடநாட்டில் மக்களுக்காக சொத்து குவித்து வைத்துள்ள அம்மாவை பார்த்து ‘செல்பிஷ்’ அம்மா என்று சொன்னால் நடக்கிறதே வேற – என்றபடி மணி ஓசையுடன் அங்கு வந்த குல்பி வண்டியை நோக்கி விரைந்தார்..

பகிர்

There are no comments yet