புது டெல்லி / சென்னை: ஜம்மு – காஷ்மீர் மாநிலம், யூரியில் உள்ள ராணுவ முகாம் மீது, கடந்த வாரம் , பாகிஸ்தான் பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதலில், 18 வீரர்கள் கொல்லப்பட்டனர்; இது, நாடு முழுவ தும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று, எல்லை கட்டுப்பாடு கோடு அருகே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள், ‘சர்ஜிகல் ஸ்ட்ரைக்’ எனப்படும், அதிரடி தாக்குதல் நடத்தி, அழிக்கப்பட்டன; இதில், பயங்கரவாதிகளும், அவர்களுடன் இருந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.

ராணுவத்தினரின் இந்த செயல் குறித்து உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பாளர் தேர்வில் படு பிஸியாக இருந்த தே.மு.தி.க. தலைவர் கேப்டன் விஜயகாந்தை சந்தித்தார் நமது கப்ஸா நிருபர், அப்போது கேப்டன் கூறியதாவது: நான் ஆர்மீல இருந்தப்ப கேப்டன்னு என் பேர சொன்னா போதும் பாகிஸ்தான் படையினர் தொடை நடுங்கி ஓடுவார்கள், நிலைமை இந்த அளவுக்கு சீரியஸா வந்துருக்காது. ஆனா இந்த ஆர்மி டாக்டர்கள் திடீரென்று இப்படி ஸ்ட்ரைக் செய்வதை என்னால் நம்ப முடியவில்லை. ஜெயலலிதாவின் ஆட்சியில் ராணுவத்திலும் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்பதத்தான் இது காட்டுகிறது. முக்கியமான சர்ஜரி செய்யும் டாக்டர்களே சர்ஜிகல் ஸ்ட்ரைக் செய்து வேலை செய்யாமல் இருந்தால் மற்ற சாதாரண ராணுவ வீரர்களும், நோயாளிகளும் பாதிக்கப்படுவார்கள் என்பதை அனைவரும் அறிவர். எனவே ஸ்ட்ரைக் செய்த டாக்டர்கள் உடனே வேலைக்கு திரும்பவேண்டும் என தே.மு.தி.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி பேட்டியை நிறைவு செய்தார்.

There are no comments yet