இது தற்போதைய புகைப்படம் அல்ல, கோப்புப் படம்

சென்னை: சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவை இன்று மாலை தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் நேரில் சென்று பார்த்து உடல்நலம் விசாரித்தார். முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 22-ந் தேதி வியாழக்கிழமை இரவு கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதல்வருக்கு சிகிச்சை அளிக்கப்படும் வார்டுக்கே சென்று பார்த்தார் ஆளுநர். முதல்வர் சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கே தன்னை அழைத்துச் சென்றதற்காக டாக்டர்களுக்கு ஆளுநர் நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து விளக்கியதற்காகவும் டாக்டர்களுக்கு ஆளுநர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

பின்னர் மும்பை புறப்பட்ட ஆளுநரை ஏர்போர்ட்டில் நமது கப்ஸா நிருபர் மடக்கி நிறுத்தினார், அப்போது ஆளுநர் கூறியதாவது: அம்மா மிகவும் நலமுடன் இருக்கிறார். அவருக்கு நல்ல ஓய்வு தேவைப்படுகிறது. மக்கள் நலன் காக்க அம்மா சீக்கிரம் குணமாகி வரவேண்டும் என்று கூறினார். அப்போது கப்ஸா நிருபர் அம்மா மருத்துவமனையில் இருப்பது போன்ற படங்களை வெளியிட வேண்டும் என்று கருணாநிதி கோருகிறாரே என்று கேட்டதற்கு, அதற்கென்ன இந்த படங்கள் பிரசுரியுங்கள் கருணாநிதி அன் கோ வின் முகத்தில் கரியை பூசியது போல் இருக்கும் என்று கூறி கீழ்கண்ட படங்களை தந்துவிட்டு ஜெட்டாக ஜெட் ஏர்வேஸில் மும்பை பறந்தார்.

jayachohosp
இது தற்போதைய புகைப்படம் அல்ல, கோப்புப் படம்
jayalalithaa
இது தற்போதைய புகைப்படம் அல்ல, கோப்புப் படம்

One comment