சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்-அமைச்சருமான ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த மாதம் 22-ந் தேதி சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்ட டாக்டர்கள் குழுவினர் சீரான இடைவெளியில் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. கடந்த மாதம் 30-ந் தேதி லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் ஆஸ்பத்திரியில் இருந்து சர்வதேச நிபுணரான டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்து முதல்-அமைச்சருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.jayalalitha-21

இந்நிலையில் இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று உடன்பிறப்புகளுக்கு எழுதாத கடிதத்தில் கூறியுள்ளதாவது: என் உடன் பிறவா, பிறப்பே, கழகத்தின் சிறப்பே. அம்மையார் அப்பல்லோ போய் இன்றோடு 11 நாட்கள் ஆகிவிட்டது. ஒரு புகைப்படம் இல்லை, அறிக்கை இல்லை. இதனால் எனக்கு தூக்கம் வரவில்லை, தவிக்கிறேன், என் செய்வேன். முதலமைச்சர் மருத்துவ மனையில் இருந்தவாறே காவிரி பற்றி ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியதாகவும், டெல்லியில் அவர் ஆற்ற வேண்டிய உரையினை அவரே “டிக்டேட்” செய்த தாகவும் செய்தி வருகிறது. கவர்னரும் வந்து பார்க்க வந்துவிட்டு, பட்டும்படாமல் அறிக்கை தருகிறார். ஆனால் ஒரு புகைப்படம் கூட வெளிவரவில்லை. இதுவே நானாக இருந்திருந்தால் நமது கழக தொலைக்காட்சிகள் அனைத்தையும் நேரடி ஒளிபரப்பு செய்ய செய்திருப்போமல்லவா.karuna-arrest நான் மருத்துவனையில் இருக்கும் ஒவ்வொரு நொடியையும், காணொளி மூலம் காட்டி வரும் உள்ளாட்சித் தேர்தலுக்கு உதவும்படி நடித்திருக்க மாட்டேனா. அனால் இந்த அம்மையாருக்கு என்னைப் போல் விவரம் போதவில்லை. இல்லாவிட்டால் எனக்கு விஞ்ஞான திருடன் என்று பட்டம் கொடுத்திருக்க மாட்டார்கள் என்பதையும் நீ அறிவாய் என நான் அறிவேன். அன்றொருமுறை என்னை இந்த அம்மையார் கைது செய்த்தபோது நமது சன் தொலைக்காட்சியை அழைத்து ‘அய்யய்யோ, அய்யய்யோ’ என்று நான் நடித்த நடிப்பை நாடறியும். ஆனால் அம்மையாருக்கு திரைப்படங்களில் நடித்த அளவிற்கு நிஜ வாழ்க்கையில் நடிக்க திறமை போதவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. இந்த இந்த திறமையிலாத பெண்மணியை இன்னும் ஆட்சியில் அமர்த்தி இந்த தமிழகம் எனக்கும் எனது குடும்பத்திற்கும் தீராத வேதனையை தருகிறது. இதற்கு ஒரே மருந்து அவ்வப்போது நீ கொடுக்கும் நிதிதான். எனவே உள்ளாட்சி தேர்தலுக்கு தாராளமாக நிதி வழங்கி என்னையும், என் குடும்பத்தையும் காப்பற்றுவாய் என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

There are no comments yet