சென்னை: சினிமா ஸ்டண்ட் நடிகர் களுக்கு தேசிய விருது வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடுவிடம், ஐஸ்வர்யா தனுஷ் கோரிக்கை விடுத்து உள்ளார். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ஆவணப்படம் “சினிமா வீரன்”. சினிமா வின் நிஜ கதாநாயகர்களான சண்டை (ஸ்டண்ட்) நடிகர்களை பற்றி பேசும் ஆவண படமாக இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ரஜினிகாந்த் பின்னணி குரல் கொடுக்கிறார். இந்தநிலையில் ஐஸ்வர்யா தனுஷ், நேற்று மத்திய தொலைதொடர்பு துறை மந்திரி வெங்கையா நாயுடுவை சந்தித்து பேசியபோது, “சினிமாவில் உள்ள பல துறையில் சாதனை புரிவோரை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு வருடந்தோறும் தேசிய விருது வழங்கி வருகிறது. அதே போல் நிஜ கதாநாயகர்களான சினிமா ஸ்டண்ட் நடிகர்களுக்கும் தேசிய விருது வழங்கி அவர்களை ஊக்குவிக்க வேண்டும்”, என்று கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து ஸ்டண்ட் மாஸ்டர்கள் மற்றும் ஸ்டண்ட் கலைஞர்கள் அனைவரும் ஐஸ்வர்யா தனுசை சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துகள் தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.ishwarya

இது குறித்து மேலும் விஷயங்களை கறக்க நமது கப்ஸா நிருபர் ஐஸ்வர்யாவை சந்தித்தபோது அவர் கூறியதாவது: எங்கப்பா இன்றைய அளவிலும் ‘சூப்பர் ஸ்டார்’ அந்தஸ்துடன் இருக்க காரணம், அவர் ஒரு ஆக்ஷன் ஹீரோ என்ற போர்வையில் ஸ்டண்ட் நடிகர்களை வைத்து பிழைப்பு நடத்தி வருவதால்தான். எங்கப்பா வசனம் பேசும்போது “சுத்தி சுத்தி அடிப்பேன், பறந்து பறந்து அடிப்பேன்,” என்று சுலபாமாக வசனம் பேசி விடுவார். ஆனால் சுத்தியலால் ஆணி அடிக்க கூட தெம்பில்லாதவர். சுத்துவதும், பறப்பதும் அப்பாவி ஸ்டண்ட் கலைஞர்கள் தான். ஸ்டண்ட் நடிகர்கள் உடம்பைத்தேத்த முட்டை வாங்க கூட காசில்லாமல் கஷ்டப்படுவர், ஆனால் என் அப்பாவோ மூட்டை மூட்டையாக பணத்தை சேர்த்து, கர்நாடகாவில் சொத்து சேர்த்துவைத்துள்ளார்.aishwarya-dhanush

சமீபத்தில் எங்கப்பா நடித்த லிங்கா படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சியில் ராட்சத பலூனில் பறந்து சண்டை புரிவார். அப்போது சரியான ஸ்டண்ட் கலைஞர் கிடைக்காத்தால், விலை மலிவான கிராபிக்ஸ் காட்சியை பயன்படுத்தி படத்தை முடித்தோம். இதனால் சமூக வலைதளங்களில் ‘கழுவி ஊற்றப்பட்டு’ அவமானத்தை சந்தித்தோம். சூப்பர் ஸ்டாருக்கு மிகப் பெரும் அவப்பெயராக போய்விட்டது.

சினிமாவில் சம்பாதித்த காசை வைத்து சினிமா எடுத்தால் எங்கப்பா ஓட்டாண்டி ஆகி விடுவார், அதனால் தான் ஆவணப்படம் எடுக்கிறேன். இதன் மூலம் சினிமாவுக்கு சேவை செய்தது போல் ஒரு மாயை ஏற்பட்டு ரசிகர்கள் ஆதரவு குறையாமலும், பணப்பெட்டி நிரம்புவது நிற்காமலும் கல்லா கட்டுவது தொடர்வதால், தினமும் எங்கள் குடும்பம் ஒருவேளை கஞ்சியாவது குடிக்கும். ஏற்கனவே பாபா படம் சொந்தமாக எடுத்து பப்படம் ஆனதும், கோவா படம் எடுத்து பால்கோவா ஆனதும் இந்த தமிழ் ரசிகப் பட்டாளமும் சினிமா உலகமும் அறியும். இதற்கிடையே ரோபோ படத்தில் அவருக்கு பதிலாக நிஜ ரோபோக்களையே நடிக்க வைத்து படத்தை முடிக்க படாத பாடு பட்டு வருகிறோம். இவ்வாறு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறினார்.

There are no comments yet