சென்னை: முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை குறித்து, மருத்துவமனை நிர்வாகம், அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது. இருப்பினும், வதந்திகள் பரப்பப்படுகின்றன.
இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர், ‘டிராபிக்’ ராமசாமி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: முதல்வர் சிகிச்சை பெறுவதால், அப்பல்லோ மருத்துவமனைக்கு வருபவர்களை சுதந்திரமாக அனுமதிப்பதில்லை. மருத்துவமனைக்கு வெளியே சாலையை மறித்து பூஜைகள் செய்ய, போலீசார் அனுமதிக்கின்றனர். முதல்வரின் உடல் நிலை குறித்து, சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புகிறார்கள். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதற்கான புகைப்படங்களை வெளியிட வேண்டும். முதல்வருக்கு ஓய்வு தேவை என்றால், அவர் முழுமையாக குணம் அடையும் வரை, இடைக்கால முதல்வரை நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் விவரமறிய நமது கப்ஸா நிருபர் ‘டிராபிக்’ ராமசாமியை அண்ணாசாலை டிராபிக் சிக்கனலில் சந்தித்து பேசினார். அப்போது டிராபிக்கை சரி செய்தவாறே அவர் கூறியதாவது: அம்மா நல்லபடியாக ஓய்வு எடுக்கட்டும். அவரது உடல்நிலை குறித்து வரும் வதந்திகளால் என் மனது பதறுகிறது அதனால்தான் வழக்குப் போட்டுள்ளேன். மேலும் உள்ளாட்சித் தேர்தல் வருவதால் நிர்வாகத்தை கவனிக்க இடைக்கால முதல்வர் வேண்டும் என்று எதிரிக் கட்சி தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் ஆலோசனை நடத்தினேன். அவர்தான் ‘இடை’ காலம் என்றால் சமீபத்தில் அ.தி.மு.க.வில் சேர்ந்த நமீதா மட்டுமே பொருத்தமானவர், எனவே அவரையே நியமிக்க வேண்டும் என்று கூறினார். நான் சினிமா அதிமாக பார்ப்பதில்லை, கலைஞர் கூறினால் சரியாகத்தான் இருக்கும். எனவே ‘இடை’கால முதல்வராக நமீதாவை நியமிக்க வேண்டும் என்று நீதி மன்றத்தில் மனுக்கொடுத்துள்ளேன் என்று கூறி நடையைக் கட்டினார்
There are no comments yet
Or use one of these social networks