புது டெல்லி: காவிரி பிரச்சனை தொடர்பாக தொடக்கத்தில் இருந்தே மத்திய அரசு கர்நாடகத்திற்கு சார்பாகவே நடந்து கொண்டு வந்தது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதற்கு மேல் மத்திய அரசால் இந்த பிரச்சனையில் ஒன்றும் விளையாட முடியாது என்று தமிழக மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், தடாலடியாக நேற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது’ என, மத்திய அரசு தெரிவித்ததை அடுத்து, இது தொடர்பாக, அ.தி.மு.க., – எம்.பி.,க்கள், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அனுமதி கோரினர். ஆனால், பிரதமர் அவர்களை சந்திக்க மறுத்துவிட்டார். இதையடுத்து, அரை கி.மீ., நடந்து சென்று, பிரதமர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துவிட்டு, ஏமாற்றத்துடன், சென்னைக்கு திரும்பினர்.

இதையடுத்து வீடியோ கேம் விளையாட்டில் பிஸியாக இருந்த பிரதமர் மோடியை நமது கப்ஸா நிருபர் சந்திக்க நேரம் கேட்டபோது பிரதமர் பேடி, நேரில் சந்திக்க முடியாது வேண்டுமானால் ஸ்கைப் வீடியோ சாட்டிங் மூலம் பேசலாம் என்று கூறியதையடுத்து, நமது நிருபருக்கு பிரதமர் பேடி கொடுத்த டிஜிட்டல் பேட்டி இங்கே:

நிருபர்: அய்யா, வணக்கம்modi-selfi1

மோடி: நமஸ்கார், என்ன விஷயம் சீக்கிரம் சொல்லுங்க, எனக்கு நிறைய வேலை பெண்டிங் இருக்கு…கேமை பாதியில் விட்டுட்டு உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்.

நிருபர்: இந்த காவிரி விஷயத்துல நீங்க அந்தர் பல்டி அடிச்சதா பேசிக்கிறாங்களே..

மோடி: அது கர்நாடகா ப.ஜ.க சம்பத்தப்பட்ட விஷயம், அதைப் பற்றி நீங்க பேசக்கூடாது.

நிருபர்: அய்யா, காவிரி எங்களுக்கு வெறும் ஆறு மட்டுமல்ல… அது, எங்கள் பண்பாடு; அது, எங்கள் நாகரிகம்; அது, எங்கள் குருதியுடன் கலந்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது’ என்று உங்கள் தலைமையிலான அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் சொன்னபோது உங்கள் மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கை செல்லரிக்கத் தொடங்கியது.

மோடி: உங்களுக்கு தண்ணீர் வேண்டும். எங்களுக்கு ஆட்சி, அதிகாரம் வேண்டும். காவிரியை வைத்து நான் கர்நாடகாவை கவர் செய்யலாம் என்று நினைத்துள்ளேன். கர்நாடாகவுல இன்னும் 10 மாசத்துல தேர்தல் வருது. அதனால் தான் அங்கு கலவரம் உண்டாக்கி அங்கு ஆளும் காங்கிரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தினோம். இப்போது சமயத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் சொன்னதால் இன்னும் ப.ஜ.க.வின் மதிப்பு கரநாடகாவில் உயர்ந்துள்ளது. வரும் தேர்தலில் நாங்கள் அங்கு ஆட்சியமைப்பது உறுதி.modi

நிருபர்: உங்களுக்கு தமிழ்நாட்டைப் பற்றி கவலையில்லையா, நீங்கள் இந்திய ஒருமைப்பாட்டை விரும்புபவர். இன, மொழிப் பிரிவினைகள் எல்லாம் கூடாது, ‘இது ஒற்றைத் தேசம்’ என்ற சிந்தாந்த பின்னணியில் வளர்ந்தவர். அந்த ஒருமைப்பாட்டைக் காக்க, நீங்கள் எந்த எல்லைக்கும் செல்வீர்கள், நீங்கள் எவ்வளவு கடுமையான முடிவையும் எடுப்பீர்கள் என்று நம்பினோமே

மோடி: கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் ப.ஜ.க. ஒரு இடம் கூட வெல்லவில்லை, எங்களுக்கு ஓட்டுப் போடாத உங்களைப் பற்றி எனக்கென்ன கவலை. எங்க ஓட்டு விழுதோ அங்கே மட்டுமே என் கவனம் இருக்கும். அத்துடன் தமிழ்நாட்டில் தேர்தல் வர இன்னும் நாலரை வருடங்கள் உள்ளதே, அதற்குள் தமிழர்கள் இதையெல்லாம் மறந்து விடுவார்கள்.

நிருபர்: அது சரிதாங்க…ஆனா தமிழக விவசாயிகள் கஷ்டப்படுறாங்களே…

மோடி: அதுதான் எல்லோருக்கும் இலவச வைஃபை கொடுத்திருக்கேனே, போதா குறைக்கு ரிலையன்ஸ் ஜியோ வேற இருக்கு அத வெச்சி சமாளிங்க, சரி சரி எனக்கு பிளைட்டுக்கு நேரமாச்சு பேட்டியை இதோட முடிச்சுக்குவோம்.

There are no comments yet