சென்னை: முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு இன்று மாலை 6.55 மணிக்கு சசிகலா அக்காள் மகனும், ஜெ., வளர்ப்பு மகனுமான வி.என். சுதாகரன் வந்தார். அப்போது மருத்துவமனை வாயிற் கதவு மூடப்பட்டிருந்தது. மருத்துவமனை வாளாகத்தில் காரில் இருந்து இறங்காமல் காருக்குள்ளேயே காத்திருந்தார். அப்போது மருத்துவமனையில் வாயிற் கதவு திறக்காததால், உள்ளே இருந்தவர்களுடன் செல்போனில் தொடர்புகொண்டார். அரைமணி நேரம் கழித்து அவருக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுமதி கிடையாது என பதில் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.
அப்பல்லோ வாசலில் காரை யூ டர்ன் எடுத்தபோது சுதாகரன் நமது கப்ஸா நிருபருக்கு காரிலிருந்தவாறே ஜெயலலிதா ஸ்டைலில் கொடுத்த பேட்டி: எனது முன்னாள் அம்மா .உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு செப்., 22 இரவு, சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முதலில் “ஜெயலலிதா சிறிது காய்ச்சலால் கஷ்டப்படுகிறார், நீர்சத்து குறைவாக உள்ளது எனக் கூறிய அப்பல்லோ பின்னர் அவருக்கு காய்ச்சலும் சர்க்கரை வியாதியும் இருப்பதால் . இன்னும் இரண்டு நாள் மருத்துவ மனையில் ஓய்வெடுப்பார் என்று கூறியது. அடுத்ததாக மூசசு திணறலும் நுரையீரல் அடைப்பும் இருப்பதால் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது, குணமடைந்து வருகிறார். மருத்துவமனை உணவுகளை சாப்பிடுகிறார், கிரிட்டிகல் கேர் யூனிட்டில் இருக்கிறார், உலகெங்கும் உள்ள மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை தொடர்கிறது என்று செய்திகள் வந்தன.
பிறகு அதிரடியாக மருத்துவ ரிப்போர்ட்களை பார்த்த மூன்று பேர் சஸ்பெண்ட், காவல்துறை எந்த விஷயமும் வெளியே போகாமல் காவல் காக்கிறது, முதல்வர் இருக்கும் தளம் முழுவதும் காலி செய்யப்பட்டு சின்னம்மா சசிகலா குடும்பம் தங்கி இருக்கிறது என்று கற்பனையில்லாதா புலனாய்வு செய்திகள் உலா வந்தன. இப்போது லண்டனில் இருந்து வந்த நுரையீரல் தொற்றுநோய் சிகிச்சை நிபுணர், டாக்டர் ரிச்சர்ட் பேல்,மற்றும் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த, நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் கில்னானி; மயக்கவியல் தீவிர சிகிச்சை நிபுணர், டாக்டர் அஞ்சன் டிரிக்கா; இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் நிதிஷ்நாயக் ஆகியோர் , ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர் என்று செய்திகள் தொடர்கின்றன. என முன்னாள் அம்மாவுக்கு என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. என்னை அவர் தூக்கியெறிந்தாலும் அவர் எனக்கு அம்மா என்பதை யாராலும் மாற்ற முடியுமா. பெத்த மனம் கல்லு, பிள்ளை மனம் பித்து என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது எங்கள் இருவரின் உறவு.
தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்று சொல்வார்கள், அதனால்தான் என் என் அம்மாவுக்கு ஒன்று என்றவுடன் இரண்டாம் வாரத்தில் அப்பல்லோவில் ஆஜராகி விட்டேன். இப்போது பிள்ளை அதன் தாயை பார்க்க மற்றவர்களின் தயவை நாடி இருக்கும் நிலையில் இருக்கிறது. என் அம்மா பூரண குணமடைந்து விரைவில் தங்கத் தாரகையாக வரும்போது என்னை ஏற்றுக் கொள்வார் என நம்புகிறேன் என்று கண்ணீர் விட்டு அழுது தான் சிவாஜி வீட்டு மருமகன் என்பதை நிரூபித்தார்.
There are no comments yet
Or use one of these social networks