சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்திக்க முடியவில்லை. இருப்பினும் அப்பல்லோ மருத்துவ குழுவினர் மற்றும் அமைச்சர்களை சந்தித்து அவரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன் என்று எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நலம் விசாரிப்பதற்காக எதிர்க்கட்சி தலைவரும் தி.மு.க., பொருளாளருமான ஸ்டாலின் அப்பல்லோவிற்கு இன்று மாலை வருகை தந்தார். மாலை 7.05 மணிக்கு மருத்துவமனைக்குள் சென்ற அவர் 7.25 மணிக்கு வெளியில் வந்தார். பின்னர், அவர் நமது கப்ஸா நிருபருக்கு அளித்த பேட்டி: முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைபாட்டின் காரணமாக கடந்த 22 ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சில நாட்களில் குணமடைந்து பணிக்கு திரும்புவார் என முன்னர் அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. ஆனால் அவர்வீடு திரும்பாமல் அப்பல்லோவை கொடநாடு ஆக்கிவிட்டார்.
கடந்த வாரம் எனக்கு முதல்வரை சந்திக்கும் என்ணனம் இல்லைதான் என்று அனைவருக்கும் சொல்லியிருந்தேன். ஆனால் மும்பையில் இருந்து கவர்னர், டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல், மற்றும் அனைத்து தமிழக எடு பிடி கட்சித் தலைவர்களும் அப்பொல்லோவில் ஆஜராகி விட்டனர். எனவே என் அப்பா தி.மு.க., தலைவர் கருணாநிதி லோக்கல் பேர்வழிகளான நாம் நாம் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நலம் விசாரிக்காவிட்டால் நாளைக்கு அனைவரும் நம்மை பேஸ் புக்கில் ஏசுவார்கள், எனவே எப்படியாவது பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி ஜெயலலிதாவை பார்த்து வர எனக்கு உத்தரவிட்டார். அவர் உத்தரவின்படி, நான்
சாமியார் போன்ற மாறு வேடத்தில் சென்று அப்பல்லோவில் நுழைந்து ஐ.சி.யு வார்டு வரை சென்றேன். அதற்குப் பிறகு அவர் இருக்கும் வார்டுக்கு செல்லும் வழிதெரியவில்லை. எனவே மாறு வேடத்தைக் கலைத்து விட்டு மருத்துவ குழுவினர் மற்றும் அமைச்சர்களிடம் அவரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன். அவர்கள் ஜெயலலிதா விரைவில் நலம் பெறுவார் என தெரிவித்தனர். நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரிடம் அவரின் உடல்நிலை குறித்து விசாரித்தேன்.முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற்று பணிக்கு திரும்ப வாழ்த்துகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
There are no comments yet
Or use one of these social networks