சென்னை : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22ம் தேதி இரவு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவதிப்பட்ட அவருக்கு உடலில் சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம், ஈ.சி.ஜி., நுரையீரல் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வந்தது. அவருக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க தேவையான மருந்துகளும் செலுத்தப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க லண்டனில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவு நிபுணர் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலே வரவழைக்கப்பட்டார். அவரும் ஜெயலலலிதாவின் உடல் நிலையை பரிசோதித்து சிகிச்சை அளித்தார். மருத்துவர்களின் தீவிர சிகிச்சையின் காரணமாக அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதாவை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று நேரில் சந்தித்தார். பின்னர் நமது கப்ஸா நிருபரிடம் பேசிய வைகோ கூறியதாவது: முதல்வர் நலமாக உள்ளார். அவர் பூரண உடல்நலம் பெறுவதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முழு உடல் நலத்துடன் அவர் விரைவில் வீடு திரும்புவார். என்னிடம் விரைவில் வீடு திரும்புவதாக கூறினார். அப்போது அவருடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டேன். என் வாழ்நாளில் மறக்கமுடியாத பெட்டகமாக அந்த செல்ஃபி இருக்கும். அவரது உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தேன். காவிரி பிரச்னைக்காக சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடி தமிழக உரிமையை மீட்டுத் தந்த கன்னித் தாய் அவர், அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்து கடந்த மாதம் 22ம் தேதி முதல் நான் அன்னம் ஆகாரம் இல்லாமல் இருக்கிறேன். அம்மாவுடன் எடுத்த செல்ஃபியை 20 ஆண்டுகள் கழித்து வெளியிட்டு கருங்காலி கருணாநிதியின் குடும்ப அரசியலுக்கு முடிவு கட்டுவேன்.
முதல்வருக்கு சிகிச்சை அளித்து வரும் லண்டன் டாக்டர் ரிச்சர்டை சந்தித்து பேசினேன். அவரிடம் பேசுகையில், எங்கள் மாநில தலைவருக்காக இரண்டு முறை லண்டனில் இருந்து வந்து சிகிச்சை அளித்ததற்காக நன்றி. அதற்காக நாங்கள் நெஞ்சம் நெகிழ்ந்து போய் இருக்கிறோம். தமிழக மக்கள் சார்பில் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தேன். அவரும் மகிழ்ச்சி தெரிவித்து, அவரது விசிட்டிங் கார்டை எனக்கு தந்தார்.
பின்னர் நானும் தம்பி பிரபாகரனும் ஒரு முறை வன்னிக் காட்டில் நடந்து செல்லும் போது பிரபாகரனுக்கு காலில் முள் தைத்தது, அதை நான்தான் லகுவாக எடுத்து அந்த காயத்திற்கு மருந்திட்டு குணப்படுத்தினேன். அந்த அனுபவத்தை டாக்டர் ரிச்சர்டுக்கு விளக்கி அது போல் திறமையாக அம்மாவுக்கு மருத்துவம் செய்ய ஆலோசனை சொன்னேன். அவர் முதல்வர் முழு உடல் ஆரோக்கியத்துடன் விரைவில் வீடு திரும்புவார். அதிமுக தொண்டர்களின் கவலை விரைவில் தீரும். முதல்வர் பூரண நலத்துடன் வீடு திரும்புவார் என்றார்.
அம்மாவையும், டாக்டர் ரிச்சர்டையம் சந்தித்த பிறகும் கவர்னர் மாளிகை சென்று கவர்னர் வித்தியாசாகர் ராவை சந்தித்து பேசினேன், ராவ் காரு என்னுடைய நல்ல நண்பர், மணவாடும் கூட, மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்றும் வைகோ தெரிவித்தார்.
There are no comments yet
Or use one of these social networks