சென்னை: முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22-ந் தேதி இரவு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் சென்னை “ஆயிரம் விளக்கு” கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை தேறி வரும் ஜெயலலிதாவை சந்திக்க தினமும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி முதல் உள்ளூர் லோக்கல் அரசியல்வாதிகள் வரை அனைவரும் அப்பல்லோவின் இரண்டம் மாடிவரை வந்து உள்ளேன் ஐயா என்று அட்டெண்டன்ஸ் கொடுத்துவிட்டனர். .

இதற்கிடையே அப்பல்லோவில் வைக்கப்பட்டிருந்த அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டரில் விஜயகாந்த் பெயருக்கு அருகில் கைநாட்டு இடப்படாததால் அவர் ஜெயாவை சந்திக்க வரவில்லை என்பதை உறுதி செய்து கொண்ட நமது கப்ஸா நிருபர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் சென்றபோது அங்கு விஜயாகாந்த் எப்போதும்போல் வழக்கமான போஸில் ‘கோப காந்த்’தாக காட்சியளித்துக் கொண்டிருந்தார். அப்போது ‘கபாலி’ ஸ்டைலில் பேட்டியளித்த அவர் கூறியதாவது: “போடா போய் சொல்லு, கொஞ்ச நாளைக்கு முன்னால மோனோரயில் பாலம் கட்டுறேன்னு என் கோயம்பேடு அலுவலகத்தை இடிக்க பிளான் போட்டாங்களே அப்போ எப்படி கோபத்தோட போனாரோ ‘கேப்டன்’ அப்படிய திரும்பி வந்திட்டாருன்னு சொல்லு.. vijayakanth imageதேர்தல்ல டெப்பாசிட் போயி, ஒரு இடம் கூட சீட் வாங்காம அவமானப்பட்டு, முரசு தேசிய சின்னம் அந்தஸ்து பறிக்கப் பட்டவுடனே என்னை கிள்ளி எறிஞ்ச கீரைன்னு நினைச்சு நம்பியார் படங்கள்ல் வர்ற அடியாள் மாதிரி ‘கேப்டன்’ அப்படின்னு ஈனக்குரல்ல் கூப்பிட்ட உடனே கோயம்பேட்டில காய்ஞ்சு போன பழங்களை கூடையில அள்ளிக்கிட்டு ஹார்லிக்ஸ் கலக்கி பிளாஸ்கில் எடுத்துகிட்டு, இடுப்பில துண்டைக்கட்டிகிட்டு அப்பல்லோவுக்கு ஓடி வந்து குனிஞ்சு நின்னுகிட்டு சொல்லுங்க எஜமானியம்மா! அப்படின்னு சொல்ற ஆள்னு நினைச்சியாடா, ஃபுல்லடிச்சாலும் புல்லைத்திங்காத புலி இந்த ”கேப்டன்’ டா என்று உறுமினார்.

நான் வந்து ஜெயலலிதாவை பார்க்கணும்னு அவசியமில்லை, முடிஞ்சா ஜெயலலிதா வந்து இந்த சிங்கத்தை அதோட குகையில் சந்திக்கச் சொல்லு . எல்லோரும் அப்பல்லோ போய் அட்டெண்டன்ஸ் கொடுத்துட்டு, நான் மட்டும் போகாததால் அப்பல்லோவுக்கு ஒன்றும் நஷ்டமில்லை, அதுபோல் ஜெயலலலிதாவை நான் போய் பார்க்காததால் எனக்கு ஒன்றும் லாபமில்லை. ஜெயாவின் கூட்டணியை விட்டு வெளியேறிய எனக்கு இந்த இழிவு நிலை ஒரு நல்ல பரிசு என்று சம்பந்தமில்லாமல் உளறினார். கேப்டன் வீர பாண்டிய கட்ட பொம்மன் செகண்ட் ஷோ பார்த்தது மட்டும் நிருபருக்கு உறுதியாக தெரிந்தது.

பகிர்

There are no comments yet