திண்வனம்: திண்டிவனம் வானூர் அருகே துருவை என்ற கிராமம் உள்ளது. அங்கே ஒரு தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தீபாவளி பண்டிகை என்பதால் பட்டாசு தொழிற்சாலையில் வேலைகள் வேகமாக நடந்து வந்திருக்கின்றன. இந்நிலையில், திடீரென அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சுமார் 10 பேர் படுகாயம் அடைந்து பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பட்டாசு விபத்தையடுத்து இந்த ஆலையின் மேற்கூரை இடிந்து விழுந்து தரைமட்டமாக ஆகியிருக்கிறது.

இந்நிலையில் தீபாவளிக்கு சீனி பட்டாசு வாங்க அங்கு இங்கும் அலைந்து திரிந்த நமது கப்ஸா நிருபர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பார்ப்பதற்காக வந்திருந்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவை வழியில் சந்தித்து, ஒவ்வொரு வருடமும் தீபாவளியும் வருகிறது, அது போல் இந்த மாதிரி பட்டாசு ஆலைகளில் வருடா வருடம் விபத்து ஏற்பட்டு ஏழை தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். பாதுகாப்பு என்பது மருந்துக்குக் கூட இல்லையா இங்கே என்று, இந்த பட்டாசு ஆலை விபத்து பற்றி கேட்டார், அப்போது நாயுடு கூறியதாவது: தீபாவளிக்கு சீன பட்டாசுகள் சுமார் 3000 கோடி அளவிற்கு இந்தியாவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். சீன பட்டாசுகள் வராமல் முற்றிலும் தடுக்க வேண்டுமென சிவகாசி பட்டாசு உரிமையாளர்கள் கோரி வருகின்றனர். என் தலைவர் மோடிக்கு வெளிநாடு சுற்றவும், செல்ஃபி எடுக்கவும் நேரமில்லை.fireworks-factory-explosion

அதோடு இது தமிழ் நாட்டில் உள்ள சிவகாசி பிரச்சினை இதைப்பற்றி யோசிக்கக் கூட எங்களுக்கு நேரமில்லை. சீன பட்டாசால் சிவகாசி பட்டாசு தொழில் நலிகிறது. 5 லட்சம் தொழிலாளிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. விளையாட்டு பொருட்கள், பொம்மைகள் என்ற பெயரில் கண்டெய்னர்களில் துறைமுகங்களுக்கு சீன பட்டாசுகள் வருகின்றன என்று சொல்கிறார்கள். எனவே இந்த விபத்துக் கூட சீனர்களின் சதியாக இருக்கலாம். எனவே நமது புலனாய்வுத் துறையை முடுக்கி விட்டு இந்த விபத்தை விசாரணை செய்ய சொல்வோம். அது வரை பொதுமக்கள் பட்டாசு வெடிக்காமலேயே தீபாவளியை கொண்டாடவேண்டும். வெங்காய வெடி என்று என் பெயரில் இருக்கும் பட்டாசு வகைகளையும் பொது மக்கள் தாராளமாக வெடித்து தீபாவளியை கொண்டாடவேண்டும் என்று கூறி அம்மாவைப் பார்க்க அப்பல்லோ விரைந்தார்.

There are no comments yet