சென்னை: அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட டெல்லி மேல்–சபை உறுப்பினர் சசிகலா புஷ்பா, சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா மீதும், அவரது தோழி சசிகலா நடராஜன் மீதும் அவதூறுகளை வாரித் தூற்றினார். நேற்று சசிகலா புஷ்பா தன்னை போன்ற போலி சசிகலா புஷ்பாவை கண்டுபிடிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார், அப்போது தான் ஒரு மனநோயாளி என்றும் கூறியிருக்கிறார்.
இது குறித்து மேலும் விபரமறிய நமது கப்ஸா நிருபர் சசிகலா புஷ்பாவை திருச்சி ‘சிவா’னந்த ஆசிரமத்தில் சந்தித்து பேசினார், அப்போது சசிகலா புஷ்பா கூறியதாவது: போலி கையெழுத்து, போலி படிப்பு, போலி புருஷன் வச்சிக்கிட்டு இவ்வளவு நாள் நான் அம்மாவின் விசுவாசியாக இருந்தேன். திருச்சி சிவாவை டெல்லி ஏர்போர்ட்டில் அடிச்சது கூட நான் இல்ல, என்னோட போலி தான். அம்மா ஜெயலலிதா அது தெரியாம என்னை கட்சியிலில் இருந்து நீக்கி விட்டார்கள்.
தி.மு.க. எம்.பி. சிவாவும், தொழிலதிபர் வைகுண்டராஜனும் எனக்கு அண்ணன், தம்பி மாதிரி. ஆனா அவங்க யாருன்னே எனக்கு தெரியாது. இன்னும் சொல்லாத பல ரகசியங்கள் என்னிடம் இருக்கின்றன. என்னுடைய உண்மையான ஆட்டம் இனிமேல்தான் ஆரம்பமாகும். என் பெயரில் அடாவடி செய்து வரும் போலி சசிகலா புஷ்பாவை கண்டுபிடிக்க டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்துள்ளேன். அதோடு என் படிப்பு முதல், யு ட்யூப் நடிப்பு வரை நான் அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டதில் இருந்தே வழக்குகள் தொடர்ந்த வண்ணம் உள்ள நிலையில் என்னை மனநோயாளி என்று அறிவித்து விட்டால் கைது மற்றும் சட்ட சிக்கல்களில் இருந்து தப்பித்து விடுவேன். எனவே என்னை மனநோயாளியாக அறிவிக்க கோரி மனு கொடுத்துள்ளேன் என்று கூறி சிவ, சிவ என்று தியானம் செய்ய ஆரம்பித்தார்.
There are no comments yet
Or use one of these social networks