சென்னை: முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22–ந் தேதி முதல் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு லண்டன் மற்றும் டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ. சாத்தூர் ராமச்சந்திரன் திடீர் உடல்நலக் குறைவால் மதுரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவர் நேற்று இரவு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள் 13-ம் தேதி இரவு 7 மணி அளவில் அப்போலோ மருத்துவமனைக்கு வந்து, முதல்வரின் உடல்நிலை குறித்து சசிகலாவிடம் நேரில் விசாரித்ததாக. செய்திகள் வெளிவந்தன.
இது குறித்து மேலும் விபரமறிய கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை திமுக குழுத் தலைவருமான கனிமொழி நமது கப்ஸா நிருபரிடம் கூறியதாவது: நான் கருணாநிதியின் மகள், ஆனால் ராசாத்தி எனக்கு தாய். என் தந்தை என் அம்மாவை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் தி.மு.க. எம்.எல்.ஏ. சாத்தூர் ராமச்சந்திரனை பார்த்து வருமாறு பணித்திருந்தார். ஆனால் என் அம்மா ராசாத்தி அங்கு இரவில் சென்றதால் விவரம் தெரியாமல் வழி தவறி முதலமைச்சர் இருக்கும் வார்டுக்கும் நுழைந்தவுடன் அங்கு இருந்த அமைச்சர்கள் என் அம்மாவை சசிகலாவிடம் கூட்டிச்சென்று விட்டனர். இதை கேள்விப்பட்ட என் தந்தைக்கு பயங்கர கோபம், அம்மாவை போனிலேயே டோஸ் விட்டார். என்ன இருந்தாலும் என் தாய்க்கு, என் தந்தை போல் ‘விவரம்’ போதவில்லை. ஒரு பெண்ணாக இதை நன்கு உணர முடிகிறது என்று கூறி வருத்தப்பட்டார்.
There are no comments yet
Or use one of these social networks