சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக சு.திருநாவுக்கரசர் பதவி ஏற்றதுமே பல்வேறு மாற்றங்களைக் காங்கிரஸ் கட்சியில் மேற்கொண்டு வருகிறார். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களையும், ஓரங்கட்டப்பட்டவர்களையும் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்த்து அதிரடி நடவடிகை எடுத்தார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதலே மாநில அரசியலில் மிகப்பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. முதல்வர் ஜெயலலிதா, நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று அப்போலோ அளித்த அறிக்கையால், தமிழகத்தில் நிர்வாகப் பணிகள் தேங்காமல் நடைபெற ஏதுவாக, தற்காலிக முதல்வரை நியமிக்க வேண்டும் அல்லது முதல்வர் வகிக்கும் இலாகாக்களை மூத்த அமைச்சர் ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தி.மு.க உள்ளிட்ட சில கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், தமிழகத்தில் தற்காலிக முதலமைச்சர் நியமிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று, தி.மு.க-வின் கருத்துக்கு மாறான கருத்தை திருநாவுக்கரசர் வெளிப்படுத்தினார்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி, 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி என காங்கிரஸ் கட்சியை தி.மு.க இணைபிரியா கூட்டணியாகக் கொண்டுள்ளது. என்றாலும், தி.மு.க-வின் நிலைப்பாட்டுக்கு எதிர்மறையான கருத்துகளை திருநாவுக்கரசர் அண்மைக்காலமாக கூறிவருகிறார். சத்தியமூர்த்தி பவனில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் தி.மு.க-வுடன் கூட்டணி வேண்டாம் என பெரும்பாலான மாவட்டத் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர் என்ற தகவல் வெளியானது. எனினும், உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணி தொடரும் என்று திருநாவுக்கரசர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.thirunavukkarasar-vijayakanth

இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை இன்று சந்தித்துப் பேசினார் திருநாவுக்கரசர். இன்று பிற்பகல் 1 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வந்த திருநாவுக்கரசர் அங்கு விஜயகாந்த்தை சந்தித்தார். இதுகுறித்து பின்னர் நமது கப்ஸா நிருபரிடம் திருநாவுக்கரசர் பேசுகையில், நானும் சினிமாவில் கதாநாயகனாக நடித்திருக்கிறேன், பல ஆண்டுகளாக விஜயகாந்த்தை நன்றாக தெரியும். இருவருக்கும் நட்பும், தொடர்பும் இருக்கிறது. கேப்டனும் முன்னாள் கதாநாயகன், இந்நாள் ஜோக்கர் அனால் எங்கள் நட்பு மாறாது. அதனால் அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். இன்றுள்ள பொதுவான அரசியல் விஷயங்கள் குறித்தும் பேசினோம். உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்து நான் பேசவில்லை. அனால் கேப்டன் மும்முறை, ‘தலாக்’ கூறி தி.மு.க-விற்கு டாடா சொல்லிவிட்டு எங்களுடன் வந்துவிடுங்கள். போக போற டெபாசிட் இங்க அங்க போனா என்ன, இங்க போனா என்ன என்று கூறி என்னை அழைத்தார். என்னடா இது டெபாசிட்டுக்கு வந்த சோதனை என்று நினைத்து, நான் நன்கு யோசனை செய்து முடிவு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டேன். இந்த சந்திப்பின் பொது கேப்டன் எனக்கு தற்காப்புக் கலையும், சில ஸ்டாண்ட் மூவ்-களும் சொல்லிக் கொடுத்தார் என்றார். உங்களது அடுத்த் திட்டம் என்ன என்று கப்ஸா நிருபர் கேட்டபோது, அடுத்தது சரத்குமார், செந்தில், வடிவேலு போன்ற சினிமா, அரசியல் தலைவர்களை சந்திப்பேன் என்று கூறி விடைபெற்றார் திருநாவுக்கரசர்.

There are no comments yet