சென்னை: சர்ச்சைக்கு பெயர் போன முன்னாள் நீதிபதி கட்ஜு, சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவை ஒரு தலையாக காதலித்ததாக கூறியிருந்தார். நான் இளைஞனாக இருந்தபோது, ஜெயலலிதா மிக இளம் பெண்ணாக இருந்தார் ஜெயலலிதா. அவர் மிகவும் கவர்ந்திழுக்க கூடிய வகையில் இருந்ததால் அவர் மீது பெரும் ஈர்ப்பு எனக்கு இருந்தது என்று முகநூலில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், தனது ஜெயலலிதா காதல் முறிந்து விட்டதாக நேற்று தெரிவித்தார். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புகிறார்கள் என்ற பெயரில் பலரை கைது செய்துகொண்டிருக்கிறீர்கள். அளவுகடந்து செல்கிறீர்கள், இந்நிலை நீடித்தால் ஜனாதிபதி ஆட்சியை அமுல் செய்வேன் என எச்சரிக்கை விடுத்தார். இது குறித்து மேலும் விபரம்பரிய கட்ஜுவை நமது கப்ஸா நிருபர் எடுத்த பேட்டி
நிருபர்: தமிழகத்தின் அம்மா ஜெயலலிதாவை காதலித்ததாக சொல்லியிருக்கிறீர்களே
கட்ஜு: அதெல்லாம் காலத்தின் கோலம், அந்நாளில் நான் காதலிக்காக நடிகைகளே இல்லை. அதில் ஜெயலலிதாவும் உள்ளார்
நிருபர்: இப்போது என்ன ஆச்சு
கட்ஜு: என் காதல் பிரேக் அப் ஆயிடுச்சு… என் முகத்தை கண்ணாடியில் பார்த்தேன், தற்கொலை பண்ணிக்கலாம் போல இருந்துச்சு. இந்த மூஞ்சிக்கு ஜெயலலிதா கேட்குதான்னு நானே என் காதலை முறித்துக் கொண்டேன். அந்த வெறுப்புலதான் தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி வரும் என்று பன்னீரை மிரட்டிப் பார்த்தேன்.
நிருபர்: அவ்வப்போது பேஸ் புக்கில் காமெண்ட் எழுதி பரபரப்பு உண்டாக்குகிறீர்களே..
கட்ஜு: நீதிபதியா இருந்த காலத்தில் வேலை ஒண்ணும் செய்ய முடியல, என்னை செய்ய விடல, ரிட்டையர் ஆனா பின்னாடி வேலை ஒண்ணும் இல்லை, டைம் பாஸ் செய்ய பேஸ் புக்க விட்டா வழியில்லை
நிருபர்: கேரளா நீதி மன்றம் உங்களை நேரில் வரச்சொல்லி உத்திரவு போட்டிருக்காங்களே
கட்ஜு: நாங்களெல்லாம் பேஸ் புக் போராளிகள், எங்களுக்கு ஒரு பிரச்னைனா ஓடி ஒளிஞ்சிருவோம். நான் நீதிபதியாக இருந்தபோதே கோர்ட்டுக்கு போகாத நான், இப்போ போவேன்னு நினைக்கிறாங்களே…சரி சரி எனக்கு நேரமாச்சு ஐஸ்வர்யா ராயை பத்தி பேஸ் புக்ல ஒரு காமெண்ட் போடணும் நான் வர்றேன்.
There are no comments yet
Or use one of these social networks