சென்னை: முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் செப்டம்பர் 22-ந்தேதி நள்ளிரவில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு டாக்டர் குழுவினர் மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 11-ந்தேதியன்று கவர்னர் (பொறுப்பு) அலுவலகத்தில் இருந்து செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்த அனைத்து அரசுத் துறைகளும், நிதி, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது. மேலும், அமைச்சரவை கூட்டங்களுக்கும் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமே தலைமை வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. இந்தக் கூட்டத்துக்கு நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். இதில் அனைத்து அமைச்சர்களும் கொண்டனர்.
முதல்வர் ஜெயலலிதாவின் பொறுப்புகளை ஏற்ற பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சரவைக் கூட்டம் முடிந்து வெளியே மகிழ்ச்சியுடன் வந்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நமது கப்ஸா நிருபரிடம் கூறியதாவது: மழைகாலத்தில் எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், மற்றும் காவிரி விவகாரம் குறித்து அமைஅச்சரவை கூட்டத்திஒல் ஆலோசனை நடத்தப்பட்டது. ரெம்ப நாளைக்குபிறகு நிமிர்ந்து உட்கார்ந்து அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கு கொண்டேன். மற்ற அமைச்சர்களும் முதுகு வலி இல்லாமல் இன்று நிம்மதியாக தூங்குவார்கள். அம்மா இருக்கும்போது வளைந்து நெளிந்து குனிந்து கும்பிடு போட்டு எங்களுக்கு முதுகு வலி வந்து விட்டது. இப்போது கொஞ்ச நாட்களாக அந்த முதுகு வலி இல்லாமல் நிம்மதியாக இருக்கிறோம். எங்களுக்கும் வயதாகி விட்டது முன்பு மாதிரி குனிய முடியவில்லை என்ற அவர் கண்களில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.
There are no comments yet
Or use one of these social networks