சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகள் தீவிர போராட்டத்தில் இறங்கியுள்ளன. ‘ வீரப்பன் மறைந்த தினமான அக்டோபர் 18-ம் தேதியன்று குருபூஜை நடத்துவோம்’ என அறிவித்திருந்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இன்று காவிரிக்கான போராட்டத்தில் தீவிரமாக இருந்ததால், குருபூஜை நிகழ்வை நடத்த முடியவில்லை.
இந்நிலையில் ஆட்டோ சங்கருக்கு மணிமண்டபம் கட்ட நாம் தமிழர் கட்சி முடியு செய்து இருப்பதாக வந்த செய்தியை அடுத்து நமது கப்ஸா நிருபர் சீமானை ஒரு பொதுக் கூட்ட ஷூட்டிங்கில் சந்தித்த போது சீமான் கூறியதாவது: இரண்டு மாநில அரசுக்கும் பெரும் சவாலாக இருந்தவர் வீரப்பன். அவர் இருந்தவரையில், ‘ஒகேனக்கல் என்னுடையது’ என்று கர்நாடகா சொல்லவில்லை. ‘மேகதாதுவில் அணை கட்டுவோம்’ என கிளம்பவில்லை. யானைகளைக் கொன்றது; சந்தன மரக்கட்டைகளை கடத்தியது எல்லாம் காட்டில் இருந்த விலங்குகள். வீரப்பரும் அதே சமயத்தில் காட்டுக்குள் மிருகமாக வேஷம் போட்டு குடியிருந்ததால் அவர் மீது பெரும்பழியைச் சுமத்திவிட்டார்கள். இதுதான் எதார்த்த உண்மை. அவர் இருக்கும் வரையில் காடு மிகவும் பாதுகாப்பாக இருந்தது. அவ்வபோது சந்தன மரங்களை களை எடுத்து காட்டை அழகாக வைத்திருப்பார். இதை வன அதிகாரிகளே ஒத்துக் கொள்வார்கள். வீரப்பன் எங்களுடைய வனக் காவலர். வருகிற ஆண்டுகளில் வீரப்பனுக்குக் கட்டாயம் குருபூஜை நடத்துவோம்.
அதே போல் ஆட்டோ சங்கரும் ஒரு ஒடுக்கப்பட்ட தமிழன் தான். தனது சிறிய வயதிலேயே தன்னம்பிக்கையோடு சாராயம் காய்ச்சி, கொலை, விபச்சாரம் என்று பலருக்கு வேலை கொடுத்த அந்த தமிழனை தமிழக அரசும், மத்திய அரசும் சதி செய்து தூக்கிலிட்டன. ஒரு தமிழன் வாழ்வில் உயர முயற்சிக்கும் போது திராவிட கைக்கூலிகள் அவரைக் கைது செய்து சொல்லணாக் கொடுமைகளுக்கு ஆளாக்கினர். ஆட்டோ சங்கர் எந்த ஜாதி என்று கண்டறிந்து அந்த ஜாதிச் சங்கத்துடன் பேச்சு நடத்தி அந்த தியாகிக்கு ஒரு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பதே எனது விருப்பம். எனது விருப்பத்தை போராட்டமாக்கி நாம் தமிழர் தொண்டர்கள் தீக்குளிப்பார்கள் என நம்புகிறன் என்று கூறி அடுத்த ஷூட்டிங்குக்கு நேரமாகி விட்டது என்று கிளம்பினார்.
There are no comments yet
Or use one of these social networks