பாவங்களில் இருந்து விமோசனம் பெறவே ராமரை செருப்பால் அடிப்பேன் என்று கூறினேன் – கோட்டாவில் ஐ.ஏ.எஸ். படித்த கிறிஸ்து தாஸ் காந்தி விளக்கம்

1656

சென்னை: இந்த நாட்டில் மதச்சார்பின்மை இருப்பதால், ராமரை செருப்பால் அடிக்க எனக்கு உரிமை இருக்கிறது என முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கிறிஸ்து தாஸ் காந்தி கூறினார். சமீபத்தில் தந்தி டிவியில் ஒரு விவாதம் நடந்தது. அதில் ஒரு பேச்சாளராக கிறிஸ்துதாஸ் காந்தி கலந்து கொண்டார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான இவர் பல்வேறு துறைகளில் முக்கிய பதவிகளை வகித்தவர். தலைமை செயலாளர் கிரேடில் பதவி வகித்தவர். விவாதத்தின் போது, பாஜ பிரமுகர் ராகவன் பேச்சின் ஊடே குறுக்கிட்டுப் பேசிய கிறிஸ்துதாஸ், இந்த நாட்டில் மதச்சார்பின்மை இருக்கிறது. கடவுள் மறுப்பு கொள்கை உண்டு. ராமரை செருப்பால் அடிக்கவும் எனக்கு உரிமை இருக்கிறது என்றார். இது இந்து மதத்தினரிடையே சர்ச்சையை கிளப்பியதால் நமது கப்ஸா நிருபர் கிறிஸ்து தாஸ் காந்தியை அவரது பட்டினப்பாக்கம் வீட்டில் சந்தித்தார்.

நிருபர்: உங்கள் பூர்வீகம் என்ன,

கிறிஸ்து தாஸ் காந்தி: நான் ஒரு முற்றும் துறந்த முனிவன், எனக்கு நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக் கூடாது

நிருபர்: நீங்க நிஜமாகவே படிச்சு வேலைக்கு வந்தீங்களா

கிறிஸ்து தாஸ் காந்தி: அண்ணல் அம்பேத்கர் பரம்பரையில் வந்த என்னைப் படுச்சவனா என்று கேட்க உங்களுக்கு என்ன துணிச்சல்

நிருபர்: அம்பேத்கர் பரம்பரைனு சொல்றீங்க, ஆனா கிறிஸ்து, காந்தின்னு பேர் வெச்சிருக்கீங்களே

கிறிஸ்து தாஸ் காந்தி: என்ன செய்றது குப்பன், சுப்பன் என்று பெற்றோர் வைத்த பெயரை யாரும் மதிக்க மாட்டேன் என்கிறார்கள், அதனால் தான் கிறிஸ்து தாஸ் காந்தினு பேரை மாத்தி வெச்சிட்டு இருக்கேன். நான் கோட்டாவில் ஐ,ஏ.எஸ். படிக்கிற வரை இந்துவாகத்தான் இருந்தேன். ஐ,ஏ.எஸ். ஆன பின்னாடிதான் கிறிஸ்தவனா மாறி பெயரையும் மாத்திக்கிட்டேன். நேற்றய டி.வி நிகழ்ச்சிக்கு பின்னர் பெயரை கிறிஸ்து தாஸ் “வாந்தி”ன்னு மாத்திக்க சொல்லி எல்லோரும் சொல்றாங்க. யோசிக்கிறேன்.

நிருபர்: ராமரை செருப்பால் அடிப்பேன் என்று கூறினீர்களாமே..

கிறிஸ்து தாஸ் காந்தி: ஜீசஸ் கிறிஸ்து கூறியது போல் எனக்கு பொறுமையும், அடக்கமும், மற்ற மதத்தினரை மதிக்கும் பக்குவமும் உண்டு. இறைவன் கொண்ட அன்பால் சிவனை செருப்பால் உதைத்தவர் கண்ணப்ப நாயனார். அது போல் எனது பாவ விமோசனத்திற்காக ராமர் மீது கொண்ட பக்தியால் தான் ராமரை செருப்பால் அடிப்பேன் என்று கூறினேன். இதை மற்றவர்கள் தவறாக எடுத்துக் கொண்டார்கள். என்ன இருந்தாலும் இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு இல்லையா, இதைக் கூறக் கூட எனக்கு பேச்சுரிமை இல்லையா…

நிருபர்: இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு என்று கூறினீர்கள்…இதையே நீங்கள் இயேசுவையோ, அல்லது நபிகள் நாயகத்தையோ செருப்பால் அடிப்பேன் என்று கூற முடியுமா…

கிறிஸ்து தாஸ் காந்தி: மதச் சார்பற்ற நாங்கள் இந்துக்களை மட்டுமே தாக்குவோம். அவர்கள்தான் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள். கிறிஸ்துவர்களையோ, முஸ்லிம்களையோ இழிவு படுத்தினால் நமது மத சகிப்பின்மை இங்கு வெளிப்பட்டு, இந்தியாவை விட்டு கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானுக்கும், சென்று விட்டால், மைனாரிட்டி ஓட்டுக்கள் கிடைக்காமல் அனைத்து அரசியல் கட்சியினரும் பாதிக்கப்படுவார்களே..!

There are no comments yet