சென்னை: தஞ்சாவூர், அரவக்குறிச்சி, மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி போட்டி இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். மேலும், திமுக அழைப்பு விடுத்துள்ள, காவிரி தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்திற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இன்று நமது கப்ஸா நிருபரிடம் பேசிய வைகோ கூறியதாவது: செப்டம்பர் 22ம் தேதியன்று முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருமாத காலம் ஆகியுள்ள நிலையில் இந்த இடைத்தேர்தல் தேவையில்லாத ஒன்று.vaiko-jaya

எந்த ஒரு தேர்தலாக இருந்தாலும் அம்மாவிடம் ஆசி பெற்றுத்தான் நான் முடிவுகளை அறிவிப்பது வழக்கம். இந்நிலையில் ஜெயலலிதா அவர்கள் அப்பல்லோவில் இருப்பதால் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவரை சந்திக்க முடியாமல் அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டரின் விசிட்டிங் கார்டை மட்டுமே வாங்கி வந்தேன். அனால் இப்போது அம்மா நான்றாக பேசுகிறார் என்று கூறுகிறார்கள். அவர் எனக்கு சைகை காட்டி சிக்னல் கொடுத்தால் மட்டும் போதும், மற்ற கட்சித் தலைவர்களை நான் சரிக்கட்டி விடுவேன். எனது துரதிஷ்டம் அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது. எனவேதான் அம்மா அப்பல்லோவில் இருந்து வரும் வரை இடைத்தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறேன். இல்லாவிட்டால் இது காட்டிக் கொடுத்த கருணாநிதியின் சதி என்று கூறி இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளேன் என்று கூறினார்.

There are no comments yet