அதிமுகவில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட சசிகலா புஷ்பா டெல்லியில் நேற்று ரகசியமாக நமது கப்ஸா நிருபருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் கொலை, கொள்ளை செய்தவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இதனால் திருடர்கள் மற்றும் சமூக விரோதிகளிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. கொள்ளையர்களுக்கு சுதந்திரம் இல்லை. எனக்கு இப்போதைக்கு குடும்பம் இல்லை, தி.மு.க வில் உள்ள எனது குடும்பத்தினருக்காக உழைத்துக்கொண்டிருக்கிறேன்.

எனக்கு தொடர்ந்து மிரட்டல் வருகிறது. தி.மு.க.வில் உள்ள அனைவரும் என்னை மிரட்டி என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள். அதன் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலம் ஆகலாம் என்று நினைக்கிறார்கள். அதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன்.sasikala-pushpa-ungal-news

டெல்லியில் இருக்கும் நான் தமிழ்நாட்டில் இருக்கும் ஒருவருடன் இருப்பதுபோல் புகைப்படம் வெளியிடுகிறார்கள். எவ்வளவு பெரிய அசிங்கம். நான் அடிக்கடி தமிழ்நாடு வருவதால் இந்த மாதிரியெல்லாம் நடக்கிறது. இன்னும் நான் அ.தி.மு.க. எம்.பி.யாகவே செயல்படுகிறேன். என்னைப் போன்ற பெண்களால் பாதிக்கப்படும் இளைஞர்களின் நிலை பற்றி பேசுவேன். திருச்சி சிவாவின் நெருங்கிய நண்பர் தளபதி ஸ்டாலின். வருகிற 25–ந்தேதி அனைத்துக்கட்சி தலைவர்கள் மற்றும் விவசாய சங்கங்களின் கூட்டம் என்ற பெயரில் தி.மு.க.பொதுக்குழுவை ஸ்டாலின் கூட்டி உள்ளார், எனவே அதிமுக சார்பில் நான் பங்கேற்று ஸ்டாலினுடன் இணைந்து பணியாற்றி அவர் கரத்தை வலுப்படுத்துவேன். இவ்வாறு சசிகலா புஷ்பா கூறினார்.

There are no comments yet