சென்னை: பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக ஆதரவு கோரி விஜயகாந்த்தை மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹிருல்லா இன்று சந்தித்தார். பொது சிவில் சட்டத்தை அமுல்படுத்த மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தியாவின் பன்முகத் தன்மையை சீர்குலைக்கும் வகையிலும், சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலான மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக, அரசியல் கட்சிகளை அணி திரட்ட இஸ்லாமிய கூட்டமைப்பு முடிவுசெய்து, அதன்படி நேற்று முன்தினம் முதல் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்களை இஸ்லாமிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றன.vijakathanth-with-islam-leaders

இந்நிலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் உட்பட கூட்டமைப்பின் தலைவர்கள் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்து கேப்டன் நமது கப்ஸா நிருபரிடம் கூறியதாவது: ஜவாஹிருல்லாஹ் பாய் எதோ சிவில், கிரிமினல் அப்படின்னு சொல்லிக்கொண்டிருந்தார். என்னோட காலேஜ், கல்யாண மண்டபம் கட்டினது எல்லாமே சிவில் என்ஜினியர் தான். ஆனா அவர் மேலே இப்ப நிறைய கிரிமினல் கேஸ் இருக்கு, அதனால அவரை கிரிமினல் என்ஜினியர்ன்னு எல்லோரும் சொல்ராங்க. சிவில் எஞ்சினியர்கள் பொதுவாக வேலை பார்க்கும்போது, சிவில் சட்டம் பொதுவாக இருக்கக் கூடாதா இல்ல அவங்க மேல கிரிமினல் கேஸ் போட முடியாதான்னு என்னை சந்திக்க வந்த பாய்கள் கிட்ட கேட்டேன், அவங்க சிரிச்சிகிட்டே உங்க ஆதரவு எங்களுக்கு இருக்கா இல்லையானு கேட்டார்கள். நான் ஏகதேசி விரதம் இருந்து, ரம்ஜான் நோன்பு கஞ்சி குடிக்கிற ஆள், எனக்கு எல்லா மதமும் ஒண்ணுதான்னு சொன்னேன். என்னை பொறுத்தவரை சட்டம்னா எல்லோருக்கும் ஒண்ணுதான். அது ஆணா இருந்தாலும் சரி பொண்ணா இருந்தாலும் சரி, முஸ்லிமா இருந்தாலும் சரி இல்ல இந்துவா இருந்தாலும் சரி முதல்ல நாம மனுஷனா இருக்கணும் என்றார்.

There are no comments yet