சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு தீபாவளி சிறப்புப் பரிசு வழங்கும் விழா இன்று நடிகர் சங்க வளாகத்தில் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது. இதில் செயலாளர் விஷால், துணைத்தலைவர்கள் கருணாஸ் மற்றும் பொன்வண்ணன், மனோபாலா உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். நாசர் பேசிய போது நடிகர் சங்கத்தில் எங்களுக்கு டீ வேண்டும் என்றால் கூட எங்களுடைய காசில் தான் நாங்கள் வாங்கி சாப்பிட வேண்டும். அந்த அளவுக்கு நாங்கள் அன்றாடங்காய்ச்சிகளாக நடிகர் சங்கத்தில் இருந்து வருகிறோம், மேலும் வடை வாங்கக் கூட காசில்லாமல் கடன் வாங்கி வடை வாங்கி சாப்பிடுகிறோம் என்று பஞ்சப் பாட்டு பாடினார்.

செட் அசிஸ்டன்ட்களுடன் கும்பலோடு கும்பலாக நின்றிருந்த கப்ஸா நிருபர் விஷால் பேசியதன் சுருக்கத்தை கீழே தருகிறார்: நடிகர் சங்கத்தின் 3000 உறுப்பினர்களுக்கு வேஷ்டி சட்டையை ராம்ராஜ் நிறுவனத்திடம் இருந்து தீபாவளி இனாமாக கெஞ்சி “கூத்தாடி” குத்தாட்டம் எல்லாம் போட்டு வாங்கி வழங்கியுள்ளோம். நாடக நடிகர்கள் பலர் நாங்களும் நிர்வாகத்துடன் இணைந்து தீபாவளிப் பரிசு வழங்குகிறோம் என்று கூறி எங்களிடம் கோரிக்கை வைத்தனர். சில கோடிகளில் சம்பளம் பெரும் நாங்கள் சில ஆயிரங்களை சம்பளமாக பெரும் அவர்களிடமும் பெருந்தொகை ஒன்றை ஆட்டையை போட்டு மிக்ஸர் செலவுக்கு பயன்படுத்தி கொண்டோம்.diwal

நாங்கள் ஸ்டார் கிரிக்கெட்டில் ஊழல் செய்துள்ளோம் என்று கூறுபவர்கள், எங்கள் மீது தேவையில்லாமல் வீண் பழி சுமத்தி பணத்தை கேஸ் போட்டு செலவழிக்க வேண்டாம், கைப் புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. எனக்கு பொதுச் செயலாளராக இருப்பதற்கு வயது, வில்லத்தனம் பத்தாது. அதனால் வில்லனாக நடித்து புகழ் பெற்ற நாசரை துணைக்கு வைத்து கொண்டு, தேர்தலில் நின்று ஜெயித்தேன். நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் என்னைப் போல் குட்டி (சுவர்) இளைஞர்கள் முன்னுக்கு வர வேண்டும் என்று என் வருங்கால மாமனார் நாட்டாமை சரத்குமார் அடிக்கடி சொல்லுவார்.

நடிகர், நடிகைகள் அவர்களுக்கு இருக்கும் பிரச்சினை குறித்து புகார் தெரிவித்தால் எங்களுக்கு கிசு கிசு கேட்ட மாதிரியும் இருக்கும், என்ன பிரச்சினையெல்லாம் இருக்கிறது எப்படி பணம் பண்ணலாம் என்றும் யோசனை வரும். சினிமாத் துறை என்பது என் தாய்வீடு மாதிரி, நடிகர் சங்கம் என் அவுட் ஹாவுஸ் மாதிரி. இரண்டையும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன். நவம்பர் 27-ம் தேதி லயோலா கல்லூரியில் பொதுக்குழு கூடுகிறது. போனமுறை 1800 பேர் பொதுக்குழுவுக்கு வந்தார்கள். இம்முறை சுமார் 2000 பேரை எதிர்பார்க்கிறோம் அப்பத்தான் கலெக்ஷன் அள்ளும்… இவ்விழாவில் மூத்த நடிகர், நடிகைகளான சரஸ்வதி , கமலா , மணிஐயா, ஜெய்பாலையா ,ஜெயராமன் ,டி.கே.எஸ்.நடராஜன், தொடை தெரிய வேட்டி கட்டும் ராஜ்கிரண் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட லட்சங்களில் சொத்து உள்ள உறுப்பினர்களுக்கு தீபாவளிப் பரிசான வேட்டி, சட்டை, சேலை, மற்றும் சுகர் பேஷண்ட்டுகளான பழம் பெரும் நடிகர்களுக்கும் இனிப்பு வகைகள் வழங்கப்பட்டன என்று தெரிவித்தார்.

பகிர்

There are no comments yet