சென்னை: காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு, முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெறும் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு வந்து அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து பேசினார். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த குஷ்பு நமது கப்ஸா நிருபரிடம் கூறுகையில், ”முதல்வரின் உடல்நிலை பற்றி அறிந்து கொள்வதற்காக வந்தேன். எல்லோரையும் போல் ஜெயாவை சந்திக்க என்னையும் விடவில்லை. டாக்டர்களையும், அமைச்சர்களையும் சந்தித்துப் பேசினேன். முதல்வரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர். அரசியலில் வேறுபாடு இருந்தாலும், முதல்வர் துணிச்சல் மிக்கவர். தைரியமான பெண்மணி. அந்த ஒரே காரணத்துக்காக தான் நலம் விசாரிக்க வந்தேன்.
பத்து வருடத்துக்கு முன்னாடி வாய் தவறி, திருமணத்துக்கு முன் உறவினர்களுடன் தொடர்பு கொள்ளலாம் என்று கூறி பிரச்சனையில் மாட்டிக் கொண்டேன். அதை ‘கற்பு’க்கு எதிராக நான் கருத்து கூறியதாக பாட்டாளி மக்கள் கட்சியினர் இலவச விளம்பரத்துக்கு பயன்படுத்திக் கொண்டார்கள். பிறகுதான் இது மாதிரி பிரச்னைகளுக்கு ஆளாகாமல் என்னை பாதுகாத்துக் கொள்ள திமுகவில் இணைந்தேன். அதற்கு முன் ஜெயா டிவியில் ஜாக்பாட் நிகழ்ச்சியில் வித விதமான “ஜாக்கெட் பாட்டுகளை” நடத்திக் கொண்டிருந்தேன். சரியாக நான் திமுகவில் இணைந்த்ததும், ஜாக்பாட்டை நிறுத்தி என்னை கழட்டி விட்டு விட்டார்கள். திமுகவிலும் எனக்கு மரியாதை இல்லை, ஸ்டாலின் தான் திமுகவின் வாரிசு என்று பொத்தாம் பொதுவாக கட்சி நிர்வாகிகளிடம் கேட்காமல் கருணாநிதி கூறிவருகிறார். அது எனக்கு ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கவில்லை. திமுகவில் இன்னொரு ஜெயாவாக என்னை உருவெடுக்க விட மாட்டார்கள் என்று தெரிந்துவிட்டது
திமுகவில் இன்னும் எனக்கு செல்வாக்கு இருக்கிறது.நான் இருந்தவரை கலைஞரின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தேன். அவருக்கு உடல் நிலை சரியில்லை என்று தகவல் வந்திருக்கிறது. அவரை கண்டிப்பாக கோபாலபுரம் சென்று பார்ப்பேன், என்னை யார் தடுத்தாலும் கவலையில்லை என்று கூறினார்.
There are no comments yet
Or use one of these social networks