சென்னை: திமுகவில் இருந்து அழகிரி டிஸ்மிஸ் செய்யப்பட்டு 2 ஆண்டுகாலம் ஆகிவிட்டது. இதன் பின்னர் திமுக தொடர்பான விவகாரங்களில் அவ்வளவாக அழகிரி தலையிடுவதில்லை. ஆனால் அழகிரியின் மகன் தயா அழகிரி அவ்வப்போது திமுகவினரை சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வந்தார். இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக ஒய்வெடுத்து வரும் நிலையில், கோபாலபுரம் இல்லத்தில் மு க அழகிரி தனது மகன் தயா அழகிரி, மதுரை முன்னாள் துணை மேயர் மன்னன் ஆகியோருடன் சந்தித்தார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

இதில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த அழகிரி, கட்சியில் தனது ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாதது குறித்தும் கவலை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, திமுக தலைவர் கருணாநிதி உடல்நலமுடன் உள்ளதாக தெரிவித்தார். அழகிரியின் மகன் தயா அழகிரி நமது கப்ஸா நிருபரை தனியாக சந்தித்து, தாத்தாவிடம் இன்று கொஞ்சம் கோபமாகத்தான் பேசினேன். எனது தாத்தா ஸ்டைலில் அவரிடம் நலம் விசாரித்து அவர் பூரண நலம் பெற வாழ்த்துப்பா வாசித்தேன் என்று கீழ்கண்ட கவிதையை வாசித்துக் காட்டினார். alagiri-with-son

என்ன தாத்தா ஆச்சு உங்களுக்கு!

கால் நடக்க முடியாமல்
கட்டையிலே இருந்தீங்க – எம
காதகனின் கண்களுக்கும்
கயிறுவிட்டு வாழ்ந்தீங்க
என்ன தாத்தா ஆச்சு உங்களுக்கு!

காலையும் மாலையும்
கபட அறிக்கை விட்டீங்க
காலத்தின் தோல்வியிலும்
நிலைக்கதவு போல் இருந்தீங்க
ஒவ்வாமை உமை தாக்கி
உருக்குலைந்தீர் என்றாங்க.
என்ன தாத்தா ஆச்சு உங்களுக்கு!

தமிழினத்தை அழிப்பதற்கு
தவறாமப் பிறந்தீங்க
தந்திரமும் வஞ்சகமும்
நெஞ்சுரமாய் கொண்டீங்க
என்ன தாத்தா ஆச்சு உங்களுக்கு!

உங்க தேவை அத்தனையும்
உருப்படியாய் செய்தீங்க
ஈழத்து தமிழினத்தை
காவுகொண்டு அழிச்சீங்க
என்ன தாத்தா ஆச்சு உங்களுக்கு!

எப்போழுதும் குடும்பம்தான்
கழகம் என்று சொன்னீங்க
ஊழலே கொள்கையென்று
ஊரை நம்பவச்சு வாழ்ந்தீங்க
ஒவ்வொரு விடுமுறைக்கும்
விழாவெடுத்து மகிழ்ந்தீங்க
என்ன தாத்தா ஆச்சு உங்களுக்கு!

சாகும் வயதினிலும்
சகுனியாய் வாழ்ந்தீங்க
வாயை திறந்தாலே
வஞ்சகமாய் பொழிஞ்சீங்க.
என்ன தாத்தா ஆச்சு உங்களுக்கு!

ஈழப் படுகொலையின்
நாயகனாய் நின்னீங்க,
உலகம் தூற்றினப்போ
ஒன்னும் தெரியாத மாதிரி நடிச்சீங்க
அரை நாள் உணவொறுத்து
அடாவடியாய் நடித்தீங்க
ஆட்சிக்கும் பதவிக்கும்
ஆலாய் பறந்தீங்க
என்ன தாத்தா ஆச்சு உங்களுக்கு!

நல்லவைகள் ஒன்றையும்
நாடி நிற்க மறந்தீங்கstalin-confused
கூடா நட்போடு
குல நாசம் செய்தீங்க
பலர் வாட செய்த சதி
2-ஜி யில் கண்டீங்க.
என்ன தாத்தா ஆச்சு உங்களுக்கு!

கடவுள் இல்லையென்று
கயிறு திரித்தீங்க
கட்சி தலைமையினை
விட்டெழும்ப மறுத்தீங்க
குடும்பத் தேவை எல்லாம்
என்ன தாத்தா ஆச்சு உங்களுக்கு!

குறையாம செஞ்சீங்க
குற்ற செயல்களுக்கும்
விளக்கவுரை விட்டீங்க
எப்பொழுதும் குடும்பம்தான்
கோவிலென்று வாழ்ந்தீங்க
என்னாச்சு தாத்தா உங்களுக்கு?

எத்தனையோ போராட்டம்
எல்லாத்திலும் நடித்தீங்க
காலத்தின் களங்கத்தில்
நீக்கமற நிறைந்தீங்க
என்ன தாத்தா ஆச்சு உங்களுக்கு!

துஞ்சாமல் அஞ்சாமல்
துரோகியாய் வாழ்ந்தீங்க
துணிவோடு நின்றவரை
துரத்தி அடிச்சே வாழ்ந்தீங்க
என்ன தாத்தா ஆச்சு உங்களுக்கு!

தூசி அளவுகூட
நன்மை செய்ய மறந்தீங்க
அரசியல் வியாபாரத்தில்
அமோகமாய் விளைஞ்சீங்க
அண்ணாவின் பெயராலே
கும்மாளம் அடிச்சீங்க
என்ன தாத்தா ஆச்சு உங்களுக்கு!

யார் யாரோ ஏதேதோ
தகவல்கள் தாறாங்க
ஒவ்வாமை பிணி வந்து
உருக்குலைந்ததா சொன்னாங்க
நெட்டு நெடுங்கிடையாய்
விழுந்துவிட்டீர் என்றாங்க
என்ன தாத்தா ஆச்சு உங்களுக்கு!

பம்பரமாய் சுத்துனீங்க
பதிலடியாய் கொடுப்பீங்க
நறுக்கு தெறித்தாற்போல்
நக்கலும் அடிப்பீங்க
தொடுக்கும் கேள்விக்கு
விடுப்பீங்க நையாண்டி
என்ன தாத்தா ஆச்சு உங்களுக்கு!

படுத்து நாள் பலவாச்சு
பதட்டத்தோட இருக்கோமுங்க
தலைகோதி தட்டித்தர
அழகிரி மகன் வந்துருக்கேன்
என்ன தாத்தா ஆச்சு உங்களுக்கு!

கடவுளுக்கும் தெரியுமையா
நீங்க செய்த இரண்டகம்தான்
உண்டான பாவமெல்லாம்
சந்ததியை சேருமையா
நீங்க இல்லா காலத்திலும்
திபாவளி நடக்குமையா
முற்பகலில் செய்த வினை
பிற்பகலில் விளையுதைய்யா.
என்ன தாத்தா ஆச்சு உங்களுக்கு!

பிறந்த வந்த நாள்முதலே போராடிய
புறநானூறு வீரன் நான்னு
நா கூசாம புளுகுவீங்களே
என்ன தாத்தா ஆச்சு உங்களுக்கு!

அரசாங்கம் விட்ட ரயிலை,
திருட்டு ரயில் ஆக்கிய தீர்க்க தரிசியே
ஓடாத ரயிலின்
கீழ் படுத்து மத்திய
அரசை திகைத்து
ஓட வைத்தவரே
என்ன தாத்தா ஆச்சு உங்களுக்கு?

தன் காசில் தானே
மோதிரம் வாங்கி அதை
அண்ணன் கையால் மேடையில்
வாங்கி அகமகிழ்ந்த
குழந்தை மனதுக்காரரே
என்ன தாத்தா ஆச்சு உங்களுக்கு!

என்ன தாத்தா ஆச்சு உங்களுக்கு?
மனைவிக்கும் துனைவிக்கும்
புது மாசு இலக்கணம்
வகுத்த அடலேறே
என்ன தாத்தா ஆச்சு உங்களுக்கு!

மருத்துவமனையில் இருப்பவர்
வரும் வரை ஆட்சி கொடுங்கள்
என்று மக்கள் காலில் விழுந்து
மன்றாடியவரே

என்னதான் தாத்தா ஆச்சு உங்களுக்கு?

இந்தக் கவிதை பல்வேறு முகநூல் பதிவுகளில் இருந்து தொகுக்கப் பட்டது. நன்றி: திரு. Selvago Mathi

பகிர்

There are no comments yet