சென்னை: ஜெயலலிதாவின் உடல் நலம் பெற வேண்டும் என்று திருவண்ணாமலையில் பால்குடம் எடுத்த 60 வயது மூதாட்டி கமலாம்மாள் உயிரிழந்தார். சேலத்தில் நடந்த பால்குட ஊர்வலத்தில் தொண்டர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். பணம் கொடுத்து பால்குடத்தை எடுக்க வைப்பதும், தேர்தல் சமயங்களில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் அதிமுகவின் வாடிக்கை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட விரும்பாத அறிக்கையில் கூறியிருப்பதாவது: அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி அதிமுக சார்பாக நடத்தப்படும் பால் குட ஊர்வலங்கள் சிறு குழந்தைகளுக்கு அலகு குத்துதல், பறவை காவடி தூக்குதல், பச்சை குத்துதல் போன்ற தொடர்ந்த நிகழ்வுகளாக நடந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. திருவண்ணாமலையில் பால்குடம் எடுக்க வந்த கூட்டத்தில் சிக்கி கமலாம்மாள் என்ற 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் அம்மாவின் பெயரால் மோட்சம் சென்றார் என்றும், 17 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் என்ற செய்தி கேட்டு சந்தொசப்பட்டேன். அதிமுகவில் இதுபோன்ற செயல்பாடுகள் தேர்தல் பிரச்சாரத்தின் போதிலிருந்தே நடந்து வருகின்றன. தேர்தல் கூட்டங்களுக்கு ஆள் சேர்ப்பதும், வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் தருவதும், பால்குடம் எடுக்க வரும் பெண்களுக்கு 500 ரூபாயும், குடம், புடவை போன்ற பொருட்களை இலவசமாக வழங்குகிறோம் என்று வேலைவாய்ப்பை பெருக்கி, கிராமம் கிராமமாக சென்று லாரிகளிலும், பஸ்களிலும், வேன்களிலும் மக்களை ஏற்றி வருவதும், அதனால் பல பேர் சுலபமாக வலி வேதனையின்றி மயக்கமடைவதும் இறப்பதும்,தமிழகத்தில் வாடிக்கையாக நடந்து கொண்டிருக்கிறது.palkudam-for-jaya

ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் இருப்பதால் தங்கள் சுய விளம்பரத்திற்காக மக்களை பகடை காய்களாக நடத்தும் இந்த அரசின் செயல்களை நீதிமன்றமும், மனித உரிமை ஆணையமும் பாராட்ட வேண்டும். ஏற்கனவே ஆயுத பூஜையின் போது பூசணிக்காய் தட்டுப்பாடு ஏற்பட்டது போல், பால் குடம் எடுப்பதால் பால் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் பரவாயில்லை, அம்மா நலமுடன் திரும்ப வேண்டும். சினிமா கட் அவுட்டுகளுக்கு ரசிகர்கள் செய்யாத பாலாபிஷேகமா? முன்பு ஒரு முறை நான் குடித்து விட்டு சட்ட சபைக்கு வருவதாக அம்மா சொன்னாது கூட, நான் பால் குடித்துவிட்டு வருவதைத் தான். நான் மதுரைக்காரன் என்பதால் கடவுள் பக்தி மிக்கவன், அதனால் தான் கள்ளழகர் என்ற பெயரில் படமெடுத்தேன். டெப்பாசிட் காலியானாலும் நான் யாகங்கள் செய்வதையும், பரிகாரங்கள் செய்வதையும் நிறுத்தப் போவதில்லை. நரசிம்மா படத்தில் கூட சிங்க வேஷம் போட்டு ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளேன். கோயில் காளை படத்தில் கூட என்னை கோவிலுக்கு பிள்ளையாக நேர்ந்து விடுவார்கள் நான் ஊரைச்சுற்றி திரிவது போல் சிறப்பாக நடித்தேன்.

சின்ன கவுண்டர் படத்தில் துண்டை இடுப்புல கட்டுனா சாமி கும்பிட போறேன்னு அர்த்தம், தோளில் போட்டா தீர்ப்பு சொல்ல போறேன்னு அர்த்தம், ஓரமா வைச்சா பட்டையை கிளப்ப போறேன்னு அர்த்தம்னு காலை தூக்கி லெக் பைட் பண்ணி இருக்கேன். தெரியாத்தனமா உளுந்தூர் பேட்டை கோவிலில் “வாக்குக்கு பணம் தர மாட்டேன்னு” பிரேமலதா பேச்சை கேட்டு சத்தியம் பண்ணிட்டேன், அப்போ உண்டியல்ல போட்ட காசுக்கு தொண்டர்களுக்கு டீயும் பன்னும் வாங்கிக் கொடுத்திருந்தா சந்திரகுமார் கூட ஓடிப்போகாம இருந்திருப்பாங்க” என்று என்ற அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

பகிர்

There are no comments yet