சென்னை: ஆரம்பத்தில் வன்னியர் சங்கமாக இருந்து பின்னர் மரங்களை வெட்டி பிரபலமான ராமதாஸ், தனது குடும்ப நலனுக்காக ஜாதி சங்கத்தை பா.ம.க. என்ற கட்சியாக ஆரம்பித்தது அனைவரும் அறிந்ததே. சீனியர் ராமதாஸுக்கு, ஆரம்ப காலங்களில் வன்னியர்கள் ஆதரவு அதிகமாக இருந்தது. ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் வட தமிழகத்தில் வன்னியர் மாவட்டங்களில் 66 தொகுதிகளில் 40 இடங்களை திமுக அள்ளியிருக்கிறது. வட தமிழகத்தைப் பொறுத்தவரை வன்னியர்களே தீர்மானிக்கும் சக்திகளாக இருந்து வருகின்றனர். வட தமிழக வாக்குகள் கடந்த பல தேர்தல்களில் பாமகவுக்குதான் கிடைத்து வந்தன. இம்முறை கூட்டணி இல்லாமல் பாமக தனித்துப் போட்டியிட்டது. இருப்பினும் அந்த கட்சியால் 1 இடத்தில் கூட வெல்ல முடியாத அளவுக்குதான் வாக்குகளைப் பெற முடிந்தது.

குடும்ப அரசியல், சொத்துக் குவிப்பு, மற்றும் அன்புமணி மத்திய அமைச்சராக இருந்த போது செய்த ஊழல்கள் ராமதாஸ் குடும்பத்தை அடித்தட்டு வன்னியர் இன மக்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தூரப்படுத்தி விட்டதாக அரசியல் நோக்கர்கள் எண்ணுகின்றனர். மன கலக்கத்தில் இருக்கும் சீனியர் ராமதாஸும், மகன் அன்புமணி ராமதாஸும் கடந்த மூன்று மாதங்களாக வன்னியர் பகுதிகளுக்கு சென்று அவர்களின் ஆதரவை பெற மரம் வெட்டுதல், விறகு உடைத்தல், போன்ற வேலைகள் செய்து பாமர மக்களுக்கு உதவி செய்தும் அதற்கான பலன் எதுவும் கிடைக்காமல் திண்டிவனத்திற்கு திரும்பியதாக விபரமறியாத காக்கையார் தெரிவிக்கிறார்.

இந்நிலையில், இனிமேல் வன்னியர்களை நம்பி பிரோயோஜனம் இல்லை என்ற நிலையில் வேறு வழியில்லாமல் ராமதாஸ் குடும்பத்தினர் புதிய ஜாதியை ஆரம்பிக்க இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த புதிய ஜாதியில் யார் வேண்டுமானாலும் சேரலாம் என்றும், இந்து, முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ மதங்களை உள்ளடக்கி, ஹிமுகி (Hi-Mu-Chi) என்றும் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.anbumani-meets-pope-francis

இந்த புதிய ஜாதி குறித்து அன்புமணி ராமதாஸ் வாடிகன் சென்று போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸைச் சந்தித்து ஆலோசனை செய்துள்ளதாக ஆந்தை ஒன்று தெரிவிக்கிறது. மேலும் போப்பாண்டவரிடம் தன்னைப் பற்றியும், தனது ஹிமுகி ஜாதி குறித்தும் குறித்தும் அன்புமணி ராமதாஸ் விளக்கியதாக தெரிகிறது. தமிழகம் திரும்பியவுடன் ஹிமுகி ஜாதியில் இணைய விருப்ப மனு வழங்கப்படும் என்றும், வரும் பொங்கலன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு ஹிமுகி ஜாதிக்கு 90% இட ஒதுக்கீடு வழங்க கோரி போராட்டம் நடத்த இருப்பதாகவும் குருவியார் தனது நெருங்கிய வட்டாரங்களை மேற்கோள் காட்டி தெரிவித்தார். இதன் மூலம் வரும் ஜனவரி மாதத்திற்கு பிறகு கோடாரி விற்பனை சூடு பிடிக்கலாம் என்று வியாபாரிகள் மகிழ்ச்சியில் இருப்பதாக தெரிகிறது.

There are no comments yet