புது டெல்லி / சென்னை: நடிகை கௌதமி டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்துள்ளார். 80களில் தமிழின் முன்னணி நாயகிகளுள் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை கௌதமி. ரஜினி, கமல், விஜயகாந்த் என முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாபநாசம் படம் மூலம் தமிழில் மீண்டும் மறுபிரவேசம் செய்துள்ளார். இது தவிர நடிகர் கமல் படங்கள் சிலவற்றிற்கு அவர் காஸ்ட்யூம் டிசைனராகவும் பணியாற்றினார். வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் கவனம் செலுத்தி வரும் கௌதமி, புற்றுநோய் விழிப்புணர்வு அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்நிலையில், பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துள்ளார் கௌதமி. பிரதமருடனான சந்திப்பு குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கூடவே இந்தச் சந்திப்பு குறித்து, “பிரதமர் மோடியைச் சந்தித்தது த்ரிலாக இருந்தது” என கௌதமி குறிப்பிட்டுள்ளார். .

இந்த சந்திப்பு குறித்து மேலும் விபரமறிய நமது கப்ஸா நிருபர், கவுதமியை கமல் ஹாசன் வீட்டில் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; மோடி ஜி யை, கமல் உத்திரவின் பேரில்தான் சந்தித்தேன். மோடிக்கும் கமலுக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது. இருவருமே நல்ல நடிகர்கள். இருவரும் மனைவியை பிரிந்து வாழ்கிறார்கள். இருவருக்குமே இந்துத்துவா கொள்கைகளில் நாட்டம் உள்ளது.kamal-gowthami

காவேரி பிரச்னைக்காக நமது எம்.பிக்கள், தலைவர்களை யாரையும் சந்திக்க மோடி மறுத்து விட்டார், அனால் நான் சந்திக்க வேண்டும் என்றதுமே, உடனே அனுமதி கிடைத்தது. காவிரி பிரச்சனையை தீர்க்க என்னிடம் ஆலோசனை கேட்டார். அதற்க்கு நான், லிவிங் டுகெதர் (சேர்ந்துவாழ்தல்) தான் ஒரே வழி என்று சொன்னேன். இப்போது நானும் கமலும் கல்யாணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ்கிறோம். அது போல் தமிழ் நாடும், கர்நாடகாவுக்கு சேர்ந்து ஒற்றுமையாக தண்ணீரை பிரித்துக் கொள்ளவேண்டும் என்று கூறினேன்,. மோடி ஜி மிகுந்த ஆர்வத்துடன் நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டார்.

கவுதமியுடன் இருந்த கமல் ஹாசன் கூறியதாவது: நான் திருமணமே செய்யாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால் என்னோடு வாழ்ந்த வாணி, சரிகா ஆகியோரின் வசதிக்காக திருமணம் செய்யவேண்டிவந்தது”. “சேர்ந்துவாழ்தல் (லிவிங் டுகெதர்) முறைக்கு வாணி ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்; அச்சமயம் அவரை ஒப்புக்கொள்ள வைக்கும் நிலையிலும் நான் ஆயத்தமாக இல்லை” மேலும் “சரிகாவுடனான வாழ்க்கை 17 ஆண்டுகள் நீடித்தது ஆச்சரியம் தான். 12 ஆண்டுகள்தான் நீடிக்கும் என்று கருதியிருந்தேன். பிள்ளைகள் பெரிதாகும் வரை, அவர்களை எங்கள் முடிவு பாதிக்கக்கூடாது என்பதால் பிரிவைத் தள்ளிப் போட்டோம்” ஆனால் ‘கவுதமி தான் மிகவும் வித்தியாசமானவர். தன்னை மணந்து கொள்ளும்படி ஒருநாளும் அவர் கோரியதில்லை”. அது போல் புரிந்து வாழ்வதே முக்கியம், கர்நாடகாவும், தமிழ் நாடும் எங்கள் இருவரைப் போல் லிவிங் டுகெதர் ஆக இருக்கவேண்டும் இன்று மோடியிடம் எனக்காக கவுதமி ஆலேசனை சொன்னார் என்று கூறினார்.

There are no comments yet