தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்பே ரஜினி, நாசர் உள்ளிட்ட பல கலைஞர்கள் முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரித்த நிலையில், இயக்குனர் ஈயம் பாரதிராஜா, கவிப்-போர் அரசு வைரமுத்து ஆகியோர் அப்பல்லோ சென்று வழக்கம்போல் ஜெயலலிதாவை பார்க்காமல் மருத்துவர்களிடம் பேசிவிட்டு வெளியில் வந்து கூட்டாக நமது கப்ஸா நிருபரிடம் பேட்டி அளித்ததன் விபரம் வருமாறு:

பாரதி ராஜா: (அதுவரை சிரித்து பேசிக்கொண்டு வந்தவர் நிருபரை கண்டதும் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு) என் இனிய தமிழ் மக்களே! தென் தமிழகத்தின் குறிப்பிட்ட சில பகுதி மக்கள் திருட்டையே தொழிலாகக் கொண்டிருந்ததால் அவர்களை ‘குற்றப்பரம்பரை’ என அப்போது பிரிட்டிஷ் அரசு வகைப்படுத்தியது. இந்த வரலாற்றுப்பின்னணியை வைத்து குற்றப்பரம்பரை என்கிற படத்தை இயக்கவிருப்பதாக நான் சில ஆண்டுகளாகவே சொல்லிக்கொண்டிருந்தேன். இயக்குநர் பாலா வும் குற்றப்பரம்பரை படத்தை எடுக்கவுள்ளதாக ஒரு பிரச்சனையை கிளப்பினார். இதனால் இப்படத்தை யார் இயக்குவது என்பதில் போட்டி ஏற்பட்டு அது மோதலாக மாறி இருக்கிறது இதற்காக நானும் எனக்கு ஆதரவான முப்பதுக்கும் மேற்பட்ட இயக்குநர்கள் உசிலம்பட்டி சென்றோம். டீ செலவுக்கு கூட என்னிடம் பணம் இல்லாததால் திரும்பி வந்துவிட்டோம். இந்த படத்தின் கதை அரசியல்வாதிகளின் செய்கைகளை ஒத்திருப்பதால் ரிலீஸ் சிக்கல் வந்துவிடக்கூடாது என்று அம்மாவை பார்க்க வந்தேன் என்று சுருக்கமாக முடித்தார்.vairamuthu-bharathiraja

வைரமுத்து: அதுவரை கயிதே கசுமாலம் என்று சென்னை பாஷையில் பேசிக்கொண்டிருந்தவர் கப்ஸா நிருபரின் மைக்கை கண்டதும் செந்தமிழை வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொண்டு, ” வணக்கம், இதுகாறும் நான் அறிமுகப்பாடல் எழுதி பொற்கிழி பெறக் காரணமாயிருந்த கலைப்போலி ரஜினி காந்த் அவர்கள் பா ரஞ்சித்தின் விஷமத்தனமான சொற்களை கேட்டு என்னை வஞ்சித்ததாலும், திரைத் துறையில் பல இளம் பாடலாசிரியர்கள் அறிமுகமாகி என் முகத்திரையை மூடிவிட்டதாலும் நான் “வாய்ப்பிழந்து வாய்-பிளந்து” (இரண்டு முறை கவிதை நடையில் சொல்கிறார்) வறுமையில் வாடிக்கொண்டு பொன்மணி மாளிகை வாடகைப் பணத்தை வைத்து மளிகை பொருட்கள் வாங்கி காலம் தள்ளிக் கொண்டிருக்கிறேன். சமீபத்தில் உயிரழந்த தம்பி நா. முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் “ஒரு பாடல் சீக்கிரம் முடிந்துவிட்டதே” என்று இரங்கற்பா பாடினேன். கல்லூரி விழக்களுக்கு செல்ல என் புத்தகத்தை மொத்தமாக வாங்கச் சொல்லி வற்புறுத்துவேன், நிறைய இணைய தளங்கள் வந்துவிட்டதால் அந்த தொழிலும் நலிவடைந்து விட்டதால் உடல் நலம் குன்றிய அம்மாவை பார்க்க வருவதுபோல் விளம்பரம் தேடி இழந்த வாய்ப்பினை மீட்டெடுக்க வந்தேன்” என்று முடித்தார்.

There are no comments yet