சென்னை: அப்போலோ மருத்துவமனையில் 36 நாட்களாக தீவிர சிகிச்சையில் இருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. நோய்த் தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான சிகிச்சை தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் 20 நாட்களில் பூரண நலம் பெற்றுத் திரும்புவார்’ என்கின்றனர் மருத்துவமனை வட்டாரத்தில்.

இந்நிலையில் வரும் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் செந்தில் பாலாஜி, ஏ.கே.போஸ் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இவர்கள் மூவரும் நேற்று முன் தினம் ஒரே நாளில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். தேர்தல் கமிஷன் விதிகளின்படி, அங்கீகரிக்கப் பட்ட மாநில கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது கட்சியின் பொதுச் செயலாளரின் அங்கீகார கடிதத்தை மனுதாக்கலின் போது தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சமர்பிக்க வேண்டும். இந்நிலையில், நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள அங்கீகார கடிதத்தில் ஜெயலலிதாவின்கையெழுத்து இடம் பெறவில்லை. அதற்கு பதிலாக அவருடைய கைரேகை இருந்தது. கடிதத்தில் அரசு மருத்துவர் ஒருவர் சாட்சியாக கையெழுத்திட்டுள்ளார்.jayablacksign_18361

இது குறித்து ஒரு அரசியல் நோக்கர் கூறும்போது: கையெழுத்தா அல்லது கைரேகையா என்பது முக்கியமல்ல இந்த விஷயம் கட்சியின் பொதுச்செயலாளர் ஒப்புதல் பெறப்பட்டதா என்பதுதான் , அப்படி பெறப்படும் ஒப்புதல் அவருடைய சுயநினைவோடும், முழு சம்மதத்தின் பேரிலும் இருக்கவேண்டும், ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னதாக வெளியிட்ட பிரதமரின் அலுவலக செய்தி குறிப்புகூட முதல்வருக்கு சுய நினைவு திரும்பியிருப்பதாக செய்திவெளியிட்டுருக்கிறது ஏறக்குறைய ஒருமதத்திற்குப்பிறகு சுயநினைவுக்கு வந்தவர் ஏதாவது அனிச்சை செயலாக சில விஷயங்களை அதாவது கை கால் அசைவுகள் பேச எத்தனிப்பது போன்ற நிகழ்வுகளுக்குத்தான் வாய்ப்பே தவிர கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்து ஒப்புதல் அளிக்கும் நிலையிலிருப்பாரா என்ற மிகப்பெரிய ஐயம், அனைவருக்கும் இருக்கிறது ஒருவேளை அந்தளவுக்கு குணமடைந்திருந்தால் மிக்க மகிழ்ச்சி அதே சமயம் அப்படி இல்லாதபொழுது இந்த நிகழ்வை ஒரு சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நிகழ்வாக எடுத்துக்கொண்டு பல்வேறு திரைமறைவு விஷயங்கள் முதல்வருக்கும் மற்றவர்களுக்கும் தெரியாமல் இதுபோன்று கைரேகைகளை பெற்று நடக்க வாய்ப்பு இருக்கிறது, கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்து நிறுத்துவது அவர்கள் கட்சியின் உள்விவகாரம் யாரை வேண்டுமானாலும் நிறுத்தட்டும், ஆனால் இதை காரணம் காட்டி கைரேகையை பயன்படுத்தி மற்ற விஷயங்கள் நடப்பதையும் சொந்த கட்சியினரால் முதல்வரின் உடல்நலமில்லாத இந்த சூழலை அரசியலாக்குவதற்கும், செய்தவற்றுக்கு சட்டரீதியான வலு சேர்ப்பதற்கு இந்த நிகழ்வை உதாரணமாக எடுத்துக்கொள்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது ஆகவே தேர்தல் ஆணையம் இதனுடைய பின்விளைவுகளை  மனதில் வைத்து முடிவெடுக்கவேண்டும் என்று கூறினார்.

sasi - jaya

கான்வென்டில் படித்த ஒருவர் இப்படி கைநாட்டு வைக்கும் நிலைக்கு ஆளாகி விட்டாரே என்று வருத்தத்தில் இருந்த பெயர் வெளியிட விரும்பாத அடிமை அமைச்சர் கூறியதாவது: ஆட்சி அதிகாரம் தொடர்பான முக்கிய விஷயங்கள் அனைத்தையும் முதல்வரிடம் தெரிவிக்கிறார் சசிகலா. எதாவது பேசுவதாக இருந்தால், மிகவும் சிரமப்பட்டுத்தான் ஒரு சில வார்த்தைகளைப் பேசுகிறார். அவ்வளவு அழுத்தம் கொடுத்து அவர் பேச வேண்டிய தேவை இல்லை என்பதால், முழு ஓய்வில் இருக்கிறார். எனவே சின்னமாவுக்கு, அம்மா டெலிபதியில் தான் உத்திரவுகளை பிறப்பிக்கிறார்.

இ.எஸ்.பி. எனப்படும் புலன்புறத்தெரிவை (extrasensory perception) உபயோகம் செய்து டெலிபதி மூலம் சசிகலாவின் எண்ணங்களை அறிந்து, அதற்கேற்றவாறு ஆட்சி அதிகாரம் தொடர்பான முக்கிய உத்திரவுகளை டெலிபதி மூலம் சசிகலாவுக்கு அனுப்புகிறார். முதல்வர் ஜெயலலிதாவின் துறைகளை கவனித்து வருகிறார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அவருக்கான உத்தரவுகள் அனைத்தும் அப்போலோவில் இருந்தே பிறப்பிக்கப்படுகின்றன. அன்றாடம் கவனிக்க வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்க, காலையிலும் மாலையிலும் telepathyமருத்துவமனைக்குத் தவறாமல் ஆஜராகிவிடுகிறார் ஓ.பி.எஸ். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் என அனைவரும் உளவுத்துறையின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். டெல்லியில் உள்ள அ.தி.மு.க எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களும் கார்டன் கவனத்துக்கு வந்து கொண்டே இருக்கின்றன. இடைத்தேர்தல் பணிகளுக்கான பொறுப்பாளர்களை நியமித்து, தேர்தல் செயல்பாடுகளை கவனித்து வருகிறார் சசிகலா. அம்மா வெகு விரைவில் டிஸ்சார்ஜ் ஆகி மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வரை எங்களுக்கு நிம்மதி இல்லை என்று கண்ணீருடன் பால் குடம் எடுக்க விரைந்தார் அந்த அமைச்சர்.

There are no comments yet