சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில், துரை செந்தில் இயக்கத்தில், நடிகர் தனுஷ் இரட்டை வேடங்களில் கொடி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். கொடி படத்தின் தயாரிப்பாளரான மதன், இதற்குமுன் தயாரித்த படங்களுக்கான தொகையை விநியோகஸ்தர்களுக்கு பாக்கி வைத்துள்ளதால், விநிநோகஸ்தர்கள் போர்க்”கொடி” தூக்கினர் “கொடி”க்கு சிக்கல் உண்டானது. இது இப்படி இருக்க, இதுவரை எந்தப் படத்துக்கும் ஊர் ஊராக சுற்றாத நடிகர் தனுஷ், கொடி படத்தை குடும்பத்தோடு பாருங்கள், என தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரசிகர்களிடம் சொல்லி வருகிறார். தமிழகம் முழுவதும் ஒரே பார்முலாவை பாலோ பண்ணும் தனுஷ், ரசிகர்களை பார்த்து கையசைத்துவிட்டு ஒரு “குத்து” பாடலை பாடுகிறார். இந்த ஊரை என்னால மறக்கமுடியாது என கடந்த கால சில நினைவுகளை கூறும் அவர் அடுத்த சிலவார்த்தைகளுடன் கிளம்பிவிடுகிறார். இதனால் லட்சக்கணக்கில் செலவு செய்து பிளைட் டிக்கட், ஹோட்டல் ரூம் என செலவு செய்த தனுஷ் ரசிகர் மன்றத்தினர் கடுப்பில் உள்ளனர். திருச்சி எல்.ஏ சினிமாஸ் திரையரங்கத்துக்கு வந்தார் தனுஷ். அவர் வருகைக்காக வேலையில்லா பட்டதாரி திரையிடுவதாக இருந்தது. ஆனால் டப்பா படமெல்லாம் வேண்டாம் என நினைத்த தியேட்டர் நிர்வாகம், கடந்த சில தினங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த, ரெமோ படத்தையே ஓட்டினார்கள். தனுஷ் ரசிகர்கள் சிவகார்த்திகேயன் நடிப்பை ரசித்துக்கொண்டிருக்க, தனுஷ் திரையரங்கத்துக்குள் நுழைந்தபோது ரெமோ நிறுத்தப்பட்டது.
தனுஷின் மாரி படம் கொடுத்த வசூலை அவரது அடுத்த படங்களான தங்கமகன், தொடரி உள்ளிட்டவை தரவில்லை. இந்தப் படங்கள் பின்னடைவை சந்தித்ததால், கொடி படத்தின் மூலம் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள தனுஷ் நினைக்கிறார் என்று பேச்சு எழுந்துள்ளது. சிலவாரங்களுக்கு முன் ரெமோ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் அழுத விசயம் பூதாகரமாகியுள்ளது. இதற்கு காரணம் தனுஷ்தான் எனப் பலமான பேச்சு கோடம்பாக்க வட்டாரத்தில் உள்ளது. மேலும் அடுத்தடுத்த படங்கள் ஹிட் கொடுத்ததால் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி அதிகமாகியுள்ளதால் ரசிகர்களை தக்க வைத்துக்கொள்ள தனுஷ் நினைக்கிறார். அதற்காக இப்படி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் தனுஷ் என்றும் பேசப்படுகிறது.
இது குறித்து தீபாவளிக்கு மாமானார் வீட்டில் டேரா போட்டுக் கொண்டு இருந்த தனுஷை சந்தித்த நமது கப்ஸா நிருபருக்கு அளித்த பேட்டி: நாட்டுப்புற பாடல் என்ற பெயரில் கிராமத்து இசையை கொச்சைப் படுத்தி படம் எடுத்துக் கொண்டிருந்த என் அப்பா கஸ்தூரி ராஜாவால் துள்ளுவதோ இளமை என்ற ‘பிட்டு’ படத்தில் அறிமுகமாகி, திருடா திருடி போன்ற ‘குத்து’ படங்களில் மன்மத ராசா பாட்டுக்கு ஆடிக் கொண்டிருந்த நான் பிறகு தென்னிந்திய புரூஸ்லீ என்ற பட்ட பெயருடன் சில நாட்கள் சினிமாவில் குப்பை கொட்டிக் கொண்டிருந்தேன். பிறகு யார் செய்த பாவமோ புண்ணியமோ சிம்புக்கு எதிராக கொம்பு சீவுவதற்காக ரஜினி காந்தின் மருமகனாக வேலைக்கு சேர்ந்தேன். ரஜினி பொண்ணை கல்யாணம் பண்ணி 3 என்ற படம் எடுக்க சொல்லி கமல் பெண்ணை கட்டிப் பிடித்து நடித்து தேசிய விருது வாங்க நினைத்தேன் முடியவில்லை.
பின்னர் கலைப்போலி மாமா ரஜினி தனது அரசியல் செல்வாக்கால் ரெக்கமண்ட் செய்து தேசிய விருதை வாங்கி கொடுத்தார், பிறகு ரெண்டுவருஷங்களாக எனக்கு நேரமே சரியில்லை. கடந்த நாங்கு படங்களும் அவுட். தொடரியும் தடம் புரண்டு வந்த இடம் தெரியவில்லை. மாமா கலைப்போலி உதவுவார் என்று காத்திருந்தேன், அவர் எமி ஜாக்ஸனுடன் டூயட் பாடுவதில் பிசி ஆகி விட்டார். அது மட்டுமன்றி யங் சூப்பர் ஸ்டார் சிம்பு – சிவ கார்த்திகேயன் இருவரும் அழுகை ட்ராமா பண்ணி என்னை பீல்டு அவுட் செய்ய பார்க்கிறார்கள். நான் சிவகார்த்திகேயன் அழுததற்காகவும், எனது முந்தைய படங்கள் ஓடவில்லை என்பதாலும் அண்ணன் வைகோ ஸ்டைலில் நடைபயணம் மேற்கொண்டதாக சொல்கிறார்கள், சிவகார்த்திகேயன் பற்றி பயமில்லை.. அவர்தான் நான் டாக்டராக நடிக்கும் அடுத்த படத்தில் நர்ஸ் நளினாவாக் டூயட் பாட இருக்கிறார். ஹீரோயின் சிம்புவும் ‘வாலு’ அறுந்து கிடக்கிறார்.. நான் ‘கொடி’ படம் முழுக்க ஒரு வேடத்தில் வேட்டி சட்டையுடன் அரசியல்வாதி கெட்டப்பில் தோன்றுகிறேன், அதன் தொடர்புடைய வேட்டி விளம்பரத்துக்காகவே “கொடி” பிடித்து ஊர் ஊராக வெள்ளையும் சொள்ளையுமாக சுற்றிக் கொண்டிருக்கிறேன்.
என்றார்.
There are no comments yet
Or use one of these social networks