சென்னை:தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் நலம் தேறி வருகிறது; அவரது குடும்ப உறுப்பினர்களிடம், அரசியல் கட்சி தலைவர்கள் நேரிலும், தொலைபேசியி லும் நலம் விசாரித்து வருகின்றனர். கருணாநிதிக்கு ஏற்பட்ட காய்ச்சலை தொடர்ந்து, அவருக்கு அளிக்கப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாக, கை, கால்களில் சிவந்த நிறத்தில், அக்கி போன்றகொப்பளங்கள் தோன்றின. இதனால், அவருக்கு வீட்டிலேயே, தனியார் மருத்துவமனை டாக்டர்கள், தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது, கொப்பளங்கள் ஆறி வருகின்றன.

இதற்கிடையில், அவரது மகன் அழகிரி நேரில் சந்தித்து நலம்விசாரித்தார். அத்துடன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் இளங்கோவன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், கருணாநிதியின் குடும்பஉறுப்பினர்களை நேரில் சந்தித்தும், தொலை பேசி மூலமாகவும், அவரது உடல் குறித்து விசாரித்துள்ளனர்karunanidhi-kushboo

இதையடுத்து கருணாநிதியின் இணைவி ராசாத்தி அம்மாள் கருணாநிதியை சந்தித்து கருணாநிதி உடல் நிலை குறித்து தெரிந்து கொண்டார். உதயநிதி இன்று காலை அவரின் அறையிலிருந்து கருணாநிதி படுத்திருக்கும் அறைக்கு சென்று உடல் நலம் விசாரித்தார். கருணாநிதியின் மகன் தமிழரசு இன்று மத்திய உணவு சாப்பிடும் போது திடீரென்று பக்கத்தில் படுத்திருந்த கருணாநிதியை யாரும் எதிர்பாராவணணம் உடல் நலம் விசாரித்தார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு வந்து சென்ற பின்னர் கருணாநிதி படுத்திருக்கும் அதே அறையில் இருக்கும் தயாளு அம்மாள் கருணாநிதியை ரகசியமாக சந்தித்து உடல் நலம் விசாரித்து நீண்ட நேரம் பேசியதாக தெரிகிறது. இந்த சந்திப்பினால் தமிழக அரசியல் அரங்கில் மாற்றங்கள் வரலாம் என எதிர் கட்சித் தலைவர் ஸ்டாலின் அச்சத்தில் இருப்பதாக தெரிகிறது.

There are no comments yet