சென்னை: குருசிஷ்யன் படத்தில் ரஜினி ஜோடியாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கவுதமி. ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் பலருடன் சினிமாவில் ஜோடியாக நடித்து புகழின் உச்சம் தொட்டவர். 1998ல் கவுதமி, சந்தீப் பாட்டியா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். மறு ஆண்டே இவர்களுக்கு சுப்புலட்சுமி என்ற மகள் பிறந்தார். ஆனாலும், தம்பதிகள் அதே ஆண்டு அதாவது 1999ல் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். 2005 முதல் கமல் ஹாசனுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார் கவுதமி. கடைசியாக இவ்விருவரும் ஜோடியாக நடித்த திரைப்படம் பாபநாசம். ஆனால் தொடக்கம் முதலே கவுதமிக்கும், கமல் மகள்களுக்கும் ஏழாம் பொருத்தம் என்று கூறப்பட்டு வந்தது. சில மாதங்களுக்கு முன்பு தற்போது கிடப்பில் கிடக்கும் “சபாஷ் நாயுடு” திரைப்படதின் படப்பிடிப்பில் கவுதமி வடிவமைத்த ஆடை பிடிக்காமல் ஸ்ருதி சண்டையிட்டு படப்பிடிப்பை நிறுத்தியாதாக தெரிகிறது. சமீபத்தில் காவிரி பிரச்சினைக்கு அரசியல் தலைவர்களை சந்திக்க நேரமில்லாத ஆனால் நடிகைகளை சந்திக்க ஆர்வமுள்ள பிரதமர் மோடியை சந்தித்து புதியதாக தொடங்கிய தன்னார்வ நிறுவனமான “லைப் அகைன்” (மீண்டும் வாழ்வோம்) என்ற அறக்கட்டளை பற்றி பேசிவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 2017 ஆம் ஆண்டு உலக யோகா தினத்தன்று மாபெரும் யோக நிகழ்வை நிகழ்த்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் கவுதமி தனது ட்விட்டர் பக்கத்தில் மும்முறை தலாக் கூறி கமல் ஹாசனை பிரிவதாக கூறியிருக்கிறார் . கவுதமியின் இந்த அதிரடி முடிவை அவர் பிரதமர் மோடியை சந்தித்த பிறகே எடுத்ததாக விபரமறியாத வட்டாரங்கள் கூறுகின்றன. கமல், கவுதமி பிரிவால் கோடிக்கணக்கான தமிழ் மக்கள் குடும்பம் குடும்பமாக தமிழ் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து மேலும் விபரமறிய கமல் வீட்டிலேயே இன்னும் டேரா போட்டுக்கொண்டிருக்கும் கவுதமியை நமது கப்ஸா நிருபர் சந்தித்த போது அவர் மனம் வருந்தி அளித்த கண்ணீர் பேட்டி: “சினிமா நடிகைகளின் இலக்கணம் மீறாவண்ணம் மார்க்கெட் போன பிறகு நானும் சந்தீப் பாட்டியா என்ற தொழிலதிபரை மணந்து வெற்றிகரமாக ‘ஒரு’ வருடம் குடும்பம் நடத்தி சுப்பலக்ஷ்மி என்ற மகளையும் பெற்றெடுத்தேன். பிறகு ரகசியமாக வெளிநாட்டில் நானும் கமலும் சுற்றித் திரிந்த படம் ஒரு தமிழ் வார பத்திரிகையின் நடுப்பக்கத்தில் வெளியாகி கையும் காதலுமாக மாட்டிக் கொண்டோம். அப்போது பிரபலமாக இருந்த டிரண்ட் படி ‘லிவிங் டுகெதர்’ கான்செப்ட் படி பேட்டி கொடுத்து நாங்கள் மேன்மக்கள் என்பதை நிலை நாட்டினோம். 13 வருடங்கள் கமலுடன் சேர்ந்து வாழ்ந்தேன். சபாஷ் நாயுடு படத்தில் எனது கர்சீப்களை வைத்து ஸ்ருதிக்கு காஸ்டியூம் தயார் செய்து படப்பிடிப்பில் அணிந்து கொள்ளச் சொன்னேன். ஆனால் அந்த பெண்ணோ, “நான் தெலுங்கு படங்களில் பள்ளிச் சிறுமிகள் தலை பின்னிக்கொள்ளும் ரிப்பனை கட்டிக்கொண்டு அயிட்டம் டான்ஸ் ஆடிக் கொண்டு இருக்கும்போது, கர்சீப் கட்டினால் என் ரசிகர்கள் ஏமாந்து விடுவார்கள்” என்று சண்டை போட்டாள். எங்கள் பிரிவுக்கு இது மட்டும் காரணமல்ல, சரி யோக குரு பாபா ராம்தேவ் மாதிரி மக்களை கவர்ந்து ‘பதஞ்சலி’ போல ஒரு கம்பெனியை உருவாக்கலாம் என்று ஜியோவுக்கு ஆதரவு கொடுத்த மோடிஜி(யோ)வை சந்திக்கப் போனேன், ஆனால் அவரது மீடிங் லிஸ்ட் ஸ்ருதி இருப்பது தெரியாமல் போய்விட்டேன். அவர்கள் இருவரும் சேர்ந்து என் கமலிடம் போட்டுக் கொடுத்து வாழ்க்கையில் விளையாடி விட்டார்கள் புது காதலி தேடிக்கொண்டிருந்த கமலுக்கும் இது வசதியாக போய் விட்டது” என்று கண்ணீர் வடித்தார்.
There are no comments yet
Or use one of these social networks