சென்னை: அண்மை காலமாக ஸ்ருதி ஹாஸனுக்கும், கவுதமிக்கும் இடையே பிரச்சனையாக இருந்தது என்று தகவல்கள் வெளியாகிய நிலையில் கவுதமி கமலை பிரிந்துள்ளார். திருமண வாழ்க்கை ஒரேயாண்டில் முடிய மனமுடைந்து நின்ற நடிகை கவுதமிக்கு நடிகர் கமல் ஹாஸன் ஆதரவளித்தார். ‘தசாவதாரம்’, ‘தூங்காவனம்’ உள்ளிட்ட கமல் நடித்த படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வந்தார் கெளதமி. திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். நடிகர் கமல்ஹாசனைப் பிரிவதாக நடிகை கௌதமி நேற்று அறிவித்தார். இதுகுறித்த அறிக்கையில் அவர் கூறியதாவது: நானும் கமல்ஹாசனும் இப்போது ஒன்றாக இல்லை. ஏறத்தாழ 13 ஆண்டு இணை வாழ்வுக்குப் பிறகு, என் வாழ்வில் நான் எடுத்த மிகக்கடுமையான முடிவாக இது அமைந்துவிட்டது. இப்படியான ஓர் உறுதியான உறவில், இருவரது பாதையும் வேறு வேறு திசையில் என்று உணரும்போது, கனவுகளோடு சமசரம் செய்து கொண்டு வாழ்வைத் தொடர்வதா அல்லது உண்மையை ஏற்றுக்கொண்டு மேற்கொண்டு செல்வதா என்று முடிவெடுப்பது அத்தனை எளிதானதல்ல. இதயத்தை நொறுக்கும் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள எனக்கு இரண்டு ஆண்டுகள் பிடித்தது. இறுதியில் இந்த முடிவுக்கு வந்தேன் என்று கெளதமி நேற்று அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில் இதற்கு ஒரு பதிலறிக்கையை கமல் வெளியிட்டது போன்று ஓர் அறிக்கை சமூகவலைத்தளங்களில் உலவிவருகிறது. இதற்கு கமல் மறுப்பு தெரிவித்துள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது: இத்தருணத்தில் என் பெயரால் யாரோ அறிக்கை விட்டு விளையாடுவது விவேகமற்ற அநாகரிகச் செயல். நான் இச்சமயம் அறிக்கை ஏதும் வெளியிடுவதாய் இல்லை என்று கூறியுள்ளார். இது குறித்து ஸ்ருதி ஹாஸனின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஸ்ருதி யாருடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் முடிவுகள் குறித்து எப்பொழுதுமே கருத்து தெரிவித்தது இல்லை. எது நடந்தாலும் குடும்பம், பெற்றோர், தங்கைக்கு ஆதரவாக இருப்பார் அவர் என்றார்.shruthi_gautami

இப்படி ஆளாளுக்கு ட்விட்டர், பேஸ் புக் என்று மாறி அறிக்கை விடுவதால் குழம்பி போன நமது கப்ஸா நிருபர் எப்படியாவது நடந்த உண்மையை கண்டு பிடித்து, இந்த விஷயத்தால் பைத்தியாமாகவே ஆகிவிட்ட தமிழக மக்களின் மனதில் தெளிவைக் கொண்டுவர தனது தி.நகர் அலுவலகத்தின் 13-ம் மாடி தனி அறையில் கர்லா கட்டைகளை சுழற்றி தியானித்தில் இருந்த கமல் ஹாசனை பேட்டி கண்டார்,அப்போது கமல் கூறியதாவது: நான் எப்போதும் தெளிவாதான் குழப்புவேன். என் பெயரில் அறிக்கை விட்டவர்கள், நான் எழுதியதாக ஒரு ஸ்க்ரிப்டை எப்படியோ லீக் செய்து விட்டனர். நான் அறிக்கை விட்டால் இவ்வளவு தெளிவாக விஷயத்தை சொல்லியிருக்க மாட்டேன். கவுதமியிடம் நான் கொண்டிருந்தது நடிப்பு, நட்பு அல்ல. நட்புக்கும் நடிப்புக்கும் நிறைய வித்தியாசம்இல்லை. நட்பில் இருக்கும் ட் என்ற மெய்யெழுத்து டி என்ற உயிர் மெய் எழுத்தாக நடிப்பில் இருக்கிறது. இப்போது நட்பாக 13 வருடங்கள் இருந்து பிரிந்ததால் கோர்ட், கேஸ், டைவோர்ஸ் என்று அலைய வேண்டியது இல்லை. தட்ஸ் தி பியூட்டி ஆப் லிவிங் டுகெதர். ஐ ஆம் பிசி வித் மை நியூ லைப். என்ன ஸ்ருதி தான் அடுத்த சித்திக்காக கொஞ்சம் வெயிட் பண்ணனும். நானும் அதற்ககாதான் அறிக்கை விடக்கூட நேரமில்லாமல் அலைந்து கொண்டிருக்கிறேன் என்று கூறி தியானத்தை தொடர ஆரம்பித்தார்.

There are no comments yet