சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் 41-வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். பல்வேறு தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்துச் செல்கின்றனர். இந்த நிலையில், முதல்வரின் உடல்நலம் குறித்து அறிந்து கொள்வதற்காக நடிகை நமீதா இன்று அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் மற்றும் அமைச்சர்களிடம் முதல்வர் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நமீதா, ”முதல்வர் ஜெயலலிதா பீனிக்ஸ் பறவை போல் மீண்டு வருவார் என்றும், முதல்வர் உடல் நலம் தேறி மக்களுக்காக மீண்டும் பணி செய்ய வருவார்” என்றும் கூறினார்.vijayakanth birthday cake

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், நான் தான் ஒரிஜினல் பீனிக்ஸ் பறவை, ஜெயலலிதா வெறும் சிறைப்பறவை என்று கூறினார். இது குறித்து அவர் நமது கப்ஸா நிருபருக்கு அளித்த பேட்டியில் கேப்டன் கூறியதாவது: சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பின்னர் “பீனிக்ஸ்” பறவை போல மீண்டும் எழுந்து வருவோம் என நான் கூறினேன். அதன் பிறகு அதை வெளிப்படுத்தும் வகையில் எனது பிறந்த நாள் அன்று மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களான வைகோ, திருமாவளவன், ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் நேரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது “பீனிக்ஸ்” என எழுத்துகள் பொறிக்கப்பட்ட பிரமாண்ட கேக்கை வெட்டி மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் எனக்கு ஊட்டி மகிழ்ந்தனர். அனால் நேற்று குத்தாட்ட குமாரி நமீதா அப்போல்லோவில் ஓய்வெடுத்து, பிசியோதெரபியில் இருக்கும் ஜெயலலிதாவை பீனிக்ஸ் பறவை போல் மீண்டு வருவார் என்று கூறியிருக்கிறார். இது எவ்வளவு பெரிய அபத்தம். ஜெயலலிதா ஊழல் செய்து மாட்டிக்கொண்ட வெறும் சிறைப்பறவை தான் ஒரிஜினல் பீனிக்ஸ் பறவை நான் இருக்கும்போதே இவ்வாறு சொல்லும் நமீதா வரும் தேர்தலில் என்னை எதிர்த்து நின்று மண்ணைக் கவ்வ தயாரா என்று காட்டமாக கேட்டார்.

There are no comments yet