மும்பை/ சென்னை : தமிழக முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆகியோரின் உடல்நிலை பாதிப்புக்கு காரணம், ஒரு சிலர் வைத்துள்ள சூனியமே’ என, பிரபல ஜோதிடர் கூறியதாக, லண்டனில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகை, செய்தி வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மாதக் கணக்கில் சிகிக்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவருடைய உடல்நலக் குறைவு குறித்த தகவல்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்ற நிலையில், ஜெயலலிதாவுக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளதாக, பிரபல வெளிநாட்டு பத்திரிகை ‘டெய்லி மெயில்’ ‘தெகிரியமாக’ செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து, பிரிட்டனின் லண்டன் நகரில் இருந்து வெளியாகும், ‘டெய்லி மெயில்’ என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் உடல்நிலை பாதிப்புக்கு, சூனியம் வைக்கப்பட்டுள்ளதே காரணம் என, பெயர் குறிப்பிட விரும்பாத, ஒரு பிரபல ஜோதிடர் கூறியுள்ளார். தமிழக அரசியலில், அரசியல் கட்சிகள் இடையே கடுமையான விரோதம் இருக்கும். அதே நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் பெண்ணாக இருக்கும் போது சட்டசபையில் சேலையை உருவுவார்களே தவிர, அவர் மீது சூனியம் வைக்கும் அளவுக்கு மோசமானதாக இல்லை. ஜெயலலிதாவுக்கு எதிராக அவருடைய கட்சியை சேர்ந்த சிலரே உள்ளனர். கருணாநிதி உடல்நிலை பாதிப்புக்கும் சூனியம் வைக்கப்பட்டுள்ளதே காரணம் என, பிரபல ஜோதிடர் கூறியுள்ளார். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து விபரமறிய பாதுகாப்பிற்காக தாயத்து கட்டிக்கொண்டு மும்பை விரைந்த நமது கப்ஸா நிருபரிடம் அந்த பத்திரிகையின் இந்திய பிரதிநிதி அளித்த பேட்டி: “எங்கள் பத்திரிகை லண்டன் நகரை தலைமை இடமாக கொண்டு வெளிவருகிறது. தற்போது மோடி போன்றவர்களின் ஆட்சியில் உணவு இல்லாவிட்டாலும் டிஜிட்டல் இந்தியாவாக தொழில் நுட்பத்தில் மிளிர்ந்த்து கொண்டு இருக்கும் இந்தியா பிரிடிஷிடமிருந்து எப்படி சுதந்திரம் பெற்றது என்று எங்கள் செய்திக் குழு ஒன்று மறைமுக ஆரய்ச்சியில் ஈடுபட்ட பொழுது, அதற்கு பின்புலமாக விளங்கியது இந்தியாவில் காணக் கிடைக்கும் பில்லி, சூனியம், மந்திர தகடு, ஏவல், மாந்திரீகம், தாயத்து போன்ற சமாச்சாரங்கள் என்ற அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வந்தது. ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம், ஆனால் கூத்தாடிகளை பிரித்து விட்டால் தமிழகத்தில் காங்கிரஸ் கோஷ்டியுடன் இணைந்து ஒரு புதிய அரசியல் மாற்றத்தை உண்டாக்கலாம் என்ற நோக்கத்தோடு லண்டனில் இருந்து ஒரு பிரபல ஜோதிடரை அழைத்து வந்து பில்லி சூனியம் வைத்தோம்” என்றார். இதைக் கேள்விப்பட்ட ஜெயாவுக்கு சிகிச்சை அளிக்கும் லண்டன் டாகடர் ரிச்சர்ட் பெலே, பாதுக்கப்புக்காக அம்மாவை பார்க்க வார்டுக்கு வரும் அனைத்து அமைச்சர்களுக்கும் மந்திரித்த தாயத்து கொடுத்துள்ளதாக அப்போலோவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து அதிமுக அடிமை அமைச்சர்கள் தமிழகத்தின் பிரபல ஜோதிடர்கள் காழியூர் நாராயணன், சிவல்புரி சிங்காரம், கண்ணன் பட்டாச்சரியா ஆகியோரை தொடர்பு கொண்டு இந்த சூனியத்தை எப்படி முறியடிப்பது என்று ஆலோசனை செய்ய இருப்பதாக தலைமை கழக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
There are no comments yet
Or use one of these social networks