சென்னை: காங்கிரஸ் ஊடகத் துறை தலைவர் ஆ.கோபண்ணா வெளியிட்ட அறிக்கையில், ”தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் கே.டி.உதயம், எஸ்.ஜோசப் மணி, ஏ.மனோகரசிங் ஆகியோர் குளச்சல் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ் தலைமையில் தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் முன்னிலையில் தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டனர். கிருபானந்த வாரியாரின் பேரனும், திரைப்பட விநியோகஸ்தருமான ‘பிராவோ’ பி.தட்சிணாமூர்த்தி பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருபானந்த வாரியரின் பேரனும், பாரதீய ஜனதா கட்சியின் மாநில கலைத்துறை முன்னாள் துணை செயலாளருமான பிராவோ தட்சிணாமூர்த்தி அக்கட்சியில் இருந்து விலகி தனது முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறித்து திருநாவுக்கரசர் நமது கப்ஸா நிருபருக்கு அளித்த பேட்டி:
விஜய் டிவி யின் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி மக்களை கலக்கிக் கொண்டிருந்த போது, சன் டிவி யில் வயிற்றை கலக்கியதால் ‘அசத்தப் போவது யாரு’ என்ற ஒரு நிகழ்ச்சியை (காப்பியடித்து) ஒளிபரப்பி அதில் கிருபானந்த வாரியாரின் பேத்தி சந்தியாவை நிகழ்ச்சி தொகுப்பாளராக போட்டு விளம்பர வருமானத்தை அள்ளினார்கள். அதே பாணியில் ‘ஜெயிக்கப்போவது யாரு/தோற்கப்போறீங்க பாரு’ என்ற மேடை நிகழ்ச்சியை நாடு முழுவதும் நடத்தி ஓட்டு வங்கியை நிரப்ப திட்டமிட்டுள்ளோம். அதற்காக வாரியாரின் பேரன் பிராவோ தட்சிணாமூர்த்தி பிஜேபி யில் இருந்து வந்து காங்கிரசில் இணைந்துள்ளார். ஏற்கனவே ராகுல் காந்தி மேடைகளில் செய்து வரும் காமெடிகளுக்கு மேலும் உறுதுணையாக சில காமெடியன்கள் உதவி புரிவார்கள் என தெரிகிறது.
அது தவிர வாரியார் ஸ்டைலில் ஆன்மீக சொற்பொழிவுகள் நடத்தி பாஜாக விற்கும் அதன் இந்து வெறி அரசியலுக்கும் பதிலடி கொடுப்போம். அப்பல்லோவில் நீண்ட நாட்களாக தங்கியுள்ள அம்மாவிற்கு ஆறு கால பூஜை நடத்தும் தொண்டர்களுக்கும் பதிலடி கொடுக்கவும், காங்கிரஸ் தொழமைக் கட்சிகள் அதை சேர்ந்தவர்கள் இது போல் உடல் நலம் குன்றினால் பக்திபாடல் பாடவும் காவடி தூக்கவும் வசதியாக இருக்கும். ‘ரகுபதி ராகவ ராஜா ராம்’ பாடலை மகாத்மா காந்தி தனது டிரேடு மார்க் பாடலாக் பயன்படுத்தியது போல், திரைப்பட குத்துப் பாடல் புகழ் கானா பாலாவிடம் ஒரு பாடலை உருவாக்க சொல்லி அட்வான்ஸ் கொடுத்துள்ளோம் என்றார்.
There are no comments yet
Or use one of these social networks