சென்னை: சினிமாவில் நடிகைகளாக இருந்தபோதே குஷ்பு, நக்மா இடையே போட்டிதான். இப்போது இருவரும் ஒரே கட்சியில் இணைந்திருப்பதால் ஈகோ பிரச்சினை தலைதூக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ராகுல் காந்தி கைதுக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டம் முடிந்ததும் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் குஷ்பு கலந்து கொள்ளவில்லை. “காலையில், கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற குஷ்புவுக்கு, மாலையில் நடந்த மகளிர் காங்கிரஸ் கூட்டத்திற்கு வர முடியாமல் போனது ஏன்’ என, அகில இந்திய மகளிர் காங்., பொதுச் செயலர், நக்மா கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழக மகளிர் காங்., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாநில தலைவர் ஜான்சிராணி தலைமையில் நேற்று முன் தினம் நடந்தது. தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், அகில இந்திய காங்., செய்தி தொடர்பாளர் குஷ்பு கலந்து கொள்ளவில்லை. இதனால் கோபமடைந்த நக்மா, கூட்டத்தில் பேசும் போது, குஷ்புவை வறுத்தெடுத்தார்.
நமது கப்ஸா நிருபரிடம் பேசும்போது நக்மா கூறியதாவது: நானும் முஸ்லீம் குடும்பத்தை சேர்ந்தவள்தான். என் தாய் ஒரு முஸ்லீம், ஆனால் குஷ்புவின் தந்தை, தாய் இருவருமே முஸ்லிம்கள். அவருக்கு பொது சிவில் சட்டம் குறித்து கருத்து சொல்ல, குஷ்புவுக்கு எந்த அருகதையும் கிடையாது. முஸ்லிமான அவர், சினிமாவில் பொட்டு வைத்து நடிக்கலாம்; தவறில்லை. ஆனால், நிஜ வாழ்க்கையில், ஏன் பொட்டு வைக்கிறார்; கேட்டால், இந்து மதத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதாகக் கூறுவார். அப்படியெனில், முஸ்லிம் ஷரியத் சட்டம் பற்றி, இவர் ஏன் கருத்து கூற வேண்டும். ‘முத்தலாக்’ பற்றி, சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் நிலைப்பாட்டிற்கு எதிராக, கருத்துக்களை தெரிவிக்கும் குஷ்புவுக்கு, மாவட்ட தலைவர்கள், கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். காலையில், கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வாராம்; மாலையில் நடக்கும் மகளிர் காங்., கூட்டத்திற்குவராமல் கருணாநிதியை சந்திக்க சென்று விடுகிறார். குஷ்புவின் நடவடிக்கைகள் குறித்து, கட்சி மேலிடத்தில் புகார் தெரிவிப்பேன்.என்று கூறினார்.
இதற்க்கு பதில் அளித்து குஷ்பு கூறும்போது, நக்மா ஒரு அரை முஸ்லீம், நான் தான் ஒரிஜினல் முஸ்லீம். எனக்குத்தான் ஷரியத் பற்றி அதிகம் தெரியும். கருணாநியை பார்ப்பது எனது சொந்த விவகாரம் இதுகுறித்து பேச நக்மாவுக்கு அருகதை இல்லை. இன்று கருணாநியை சந்திப்பேன், நாளை திமுகவில் சேருவேன், நாளை மறுநாள் சினிமாவில் நடிப்பேன் என்னை யாரும் கேட்க முடியாது. முதலில் நான் ஒரு நடிகை அதை புரிந்து கொள்ளுங்கள் என்று பொரிந்து தள்ளினார்.
நக்மா-குஷ்பு குடுமி பிடி சண்டையால், என்னடா இது நமது 50-ஆண்டு அரசியல் வாழ்வுக்கு வந்த சோதனை என்று திருநாவுக்கரசர் திண்டாட்டத்தில் இருப்பதாக தெரிகிறது.
There are no comments yet
Or use one of these social networks