சென்னை: ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருத்தை கூறி வருபவர் வைகோ என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா வைகோ மீது குற்றம்சாட்டியுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள வைகோ, விஜயகாந்த்தின் தேமுதிக கட்சி மநகூடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். அதன் விளைவாக தேமுதிக மநகூடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால் அந்தத் தேர்தலின் தேமுதிக படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து, கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியது.

இதனிடையே ஆங்கில இதழ் ஒன்றிர்க்கு அளித்துள்ள பேட்டியில் விஜயகாந்தை முதல்வராக அறிவித்தது ஏன் என்று மனம் திறந்துள்ளார் வைகோ. தமிழக சட்டசபைக்கு மே மாதம் தேர்தல் நடந்தபோது மக்கள் நலக்கூட்டணி சார்பில் யாரையும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கக் கூடாது என்று நாங்கள் முடிவு செய்திருந்தோம். ஆனால் தி.மு.க.விடம் கூட்டணி அமைக்காமல் எங்கள் கூட்டணிக்கு விஜயகாந்த் வந்ததால் அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தோம் என்று கூறியது அனைவரும் அறிந்ததே. vaiko-sad

இந்நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த பிரேமலதாவிடம், விஜயகாந்த் முதல்வர் வேட்பாளாராக அறிவித்ததற்கு வைகோ வருத்தப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த பிரேமலதா, நாள்தோறும் ஒரு கருத்தைக் கூறி வருபவர் வைகோ என்றும், தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்தது வைகோதான், அதனால் இதுகுறித்து அவரிடம்தான் கேள்வி கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது குறித்து மேலும் விபரமறிய, இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், யாருமே இல்லாத பொதுக் கூட்டங்களில் முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்துப் பேசிக்கொண்டிருந்த பிரேமலதாவை நமது கப்ஸா நிருபர் ஓரம் கட்டி எடுத்த பேட்டியில் பிரேமலதா கூறியதாவது: கடந்த தேர்தலில் தனியாக நிற்கவேண்டும் என்றுதான் நான் கேப்டனிடம் சொன்னேன், என் பேச்சை கேட்டிருந்தால் அட் லீஸ்ட் டெபாசிட் கிடைத்திருக்கும். வைகோ பேச்சை கேட்டு டெபாசிட்டும்போய் விட்டது. கேப்டன் கட்டிங் குடித்து விட்டுத்தான் உளறுவார். ஆனால் மற்ற சமயங்களில் சாதாரணமாக பேசுவார். வைகோவோ ஜெயாவிடம் கட்டிங் வாங்கிவிட்டு எப்போதும் உளறுகிறார். அவருடைய தினசரி உளறலுக்கெல்லாம் நான் பதில் சொல்லமுடியாது. இடைத்தேர்தலில் மூன்று டெபாசிட்டும் போகும் என்று எனக்குத் தெரியும், அதனால் தான் நான் மட்டும் பிரச்சாரம் செய்ய வந்தேன், கேப்டன் வரவில்லை என்று ஆவேசமாக கூறினார்.

There are no comments yet